ஞாயிறு, 6 ஜூலை, 2014

பரங்கிப்பேட்டை உட்பட மாவட்டத்தில் 48 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: எஸ்.பி., உத்தரவு

கடலூர் : மாவட்டத்தில் 48 சப் இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்து எஸ்.பி., ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
விவரம் வருமாறு: திருப்பாதிரிப்புலியூர் பாஸ்கர் அண்ணாமலை நகர், தூக்கணாம்பாக்கம் சந்திரபாபு கடலூர் துறைமுகம், தேவனாம்பட்டினம் சங்கீதா பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த மணி பொருளாதார குற்றப்பிரிவிற்கும், நெல்லிக்குப்பம் பகவதி நடுவீரப்பட்டு, அங்கிருந்த ஆறுமுகம் முத்தாண்டிக்குப்பத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பண்ருட்டியில் பணிபுரியும் கலியமூர்த்தி நடுவீரப்பட்டு, ஜெயதேவி கம்மாபுரம், ராஜராஜசோழன் சிதம்பரம் தாலுகா. காடாம்புலியூர் சக்தி கணேஷ், கிள்ளை சிவஞானம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் நகர் ஜெயபால் ஆவினங்குடி, கணேசன் ராமநத்தம், கதிரவன் காட்டுமன்னார்கோவிலுக்கும், சிதம்பரம் தாலுகாவில் உள்ள செல்வம் புத்தூர், வசந்தகுமாரி சிதம்பரம் நகரம், முத்தாண்டிக்குப்பம் பத்மா குள்ளஞ்சாவடி, அண்ணாமலை நகர் கண்ணுசாமி பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் தாரகேஸ்வரி சிதம்பரம் மகளிர் காவல் நிலையம்.
மந்தாரக்குப்பம் செந்தில்வேல் குறிஞ்சிப்பாடி, மதனகோபால் விருத்தாசலம், நெய்வேலி டவுன்ஷிப் ஞானசேகர் கிள்ளை, நெய்வேலி தர்மல் குருசாமி வடலூர், ஊமங்கலம் சுப்ரமணியன் குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி விநாயகமுருகன் திருப்பாதிரிப்புலியூர், குள்ளஞ்சாவடி கந்தசாமி மந்தாரக்குப்பம்.
வடலூர் இளங்கோவன் மருதூர், நெய்வேலி மகளிர் காவல் நிலைய பவானி குள்ளஞ்சாவடி, கிருபாலட்சுமி ஊமங்கலம், ஆலடி மல்லிகா விருத்தாசலம் மகளிர் காவல் நிலையம், அங்கிருந்த செந்தாமரை நெய்வேலி மகளிர் காவல் நிலயத்திற்கும், பெண்ணாடம் ஆசைதம்பி குமராட்சி, மங்கலம்பேட்டை ஈஸ்வரி ஆலடி, சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலைய பிரேமா பெண்ணாடம்.
சிறுபாக்கம் ரவிச்சந்திரன் ராமநத்தம், அங்கிருந்த விஜி வேப்பூர், ஆவினங்குடி மனோகரன் சோழதரம், பொருளாதார குற்றப்பிரிவு ஜோதி ரெட்டிச்சாவடி, மாவட்ட குற்றப்பிரிவு சந்திரசேகரன் நில அபகரிப்பு பிரிவு, சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு ரேவதி மங்கலம்பேட்டை, பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு அன்பரசு விருத்தாசலம், கடலூர் புதுநகர் சதாசிவம் நெய்வேலி தர்மல், விருத்தாசலம் அருண்குமார் வடலூர், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சாதன பிரியா கடலூர் மகளிர் பிரிவிற்கும் ஷேக் பரீத் கடலூர் துறைமுகர், ஜெயசீலி தூக்கணாம்பாக்கம், அமலா பண்ருட்டி, ஆனந்தன் சிதம்பரம் நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக