பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை கரிக்குப்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஐஎல்எஃப்எஸ் பவர் கம்பெனியில் சனிக்கிழமை 900 அடி உயரமுள்ள சிமினி கோபுரத்திலிருந்து கீழே விழுந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமுற்றார்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கரிகுப்பத்தில் ஐஎஸ்எஃப்எஸ் பவர் கம்பெனி கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை கம்பெனியில் 900 அடி உயரமுள்ள சிமினி கோபுரத்தில் கயிறு கட்டிக்கொண்டு உள்புறமாக
மராமத்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கயிறு அறுந்ததில் மூன்று பேர் 900 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர். இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாசெளத்திரி மகன் சோனுராஜ் செளத்திரி (26), சலாவுதீன்கான் மகன் முகித்கான் (31) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஜியாவுதீன் மகன் வினோத்குமார் (18) என்பவர் கால் துண்டிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸார் மீது கல்வீச்சு, இரு இன்ஸ்பெக்டர்கள் காயம்:
இதற்கிடையே, தொழிலாளர்கள் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த பரங்கிப்பேட்டை காவல்துறையினர் தொழிலாளர்களை அப்புறப்படுத்த முயன்றபோது காவல்துறையினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் மீது தொழிலாளர்கள் கல்வீசி தாக்கி யதில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர்.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக