சனி, 26 ஜூலை, 2014

தமிழகத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு : அதிர்ச்சி தகவல்

சென்னை : தமிழகத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்  கிடைத்துள்ளது. தமிழகத்தில் 2013ம் ஆண்டில்  15 ஆயிரத்து 563 பேர்  வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் குடித்து  விட்டு வாகனம் ஓட்டியபோது விபத்தில் சிக்கியது அதிகரித்துள்ளது.  குறிப்பாக வார இறுதியில் மெட்ரோ நகரங்களில் குடித்துவிட்டு கார்  ஓட்டியதாக சில பெண்களின் லைசென்ஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது  என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டு  களுக்கு முன்பு வரை 267 பேர் போதையில் வாகனம் ஓட்டியதாக,  அவர்களின் லைசென்ஸ் ரத்து
செய்யப்பட்டது. ஆனால், அது  படிப்படியாக அதிகரித்து 2013ல் 1568 ஆக உயர்ந்துள்ளது. இது  புள்ளிவிவர கணக்குப்படி 6 மடங்கு உயர்வு என்பது அதிர்ச்சியளிக்கும்  தகவல். மோட்டர் வாகனச் சட்டத்தின்படி, குடித்து விட்டு வாகனம்  ஓட்டினால், லைசென்ஸ் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது. சில  சமயம் ரத்தும் செய்யப்படுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 2008-13ம் ஆண்டு வரை,  குடிபோதை யில் வாகனம் ஓட்டியது, விதிமுறைகளை மீறி வாகனம்  ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக 2,497  டிரைவிங் லைசென்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  அது ஐந்து மடங்காக அதிகரித்து, கடந்த ஒரே ஆண்டில் மட்டும்  2013- 14ல், 12 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. அதாவது  குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக, அவர்களின் லைசென்ஸ்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் ரத்து செய்யப்பட்ட டிரைவிங் லைசென்ஸ்கள் 2012-13ம்  ஆண்டு வரை 297 மட்டுமே இருந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு  1567 டிரைவிங் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது ஆறு  மடங்கு கூடுதல் ஆகும். இதில் வார இறுதியில் பப் உள்ளிட்ட  விடுதிகளுக்கு சென்று குடித்து விட்டு காரை ஓட்டி வந்த பெண்களின்  சிலரது லைசென்ஸ்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள் ளது  குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக