பரங்கிப்பேட்டை: காதிரியாப் பள்ளியில் நேற்று முதல் ஜூம்ஆ (வெள்ளி) தொழுகை நடைபெற்றது. முதல் நாளான (வாரம்) நேற்று பள்ளி முழுவதும் கூட்டம் நிரம்பியிருந்தது. இதற்காக இப்பள்ளிவாசல் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனையொட்டி நேற்று முதல் ஜூம்ஆ தொழுகை இங்கு துவங்கியது.தமிழ் பயான் மற்றும் அரபி குத்பாவை பள்ளியின் இமாம் மௌலவி நூருல்லா நிகழ்த்தினார். அப்துஸ் ஸமது ரஷாதி தலைமையில் தொழுகை நடைப்பபெற்றது. மீராப்பள்ளி, புதுப்பள்ளி, ஹபீபிய்யாஹ், தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ், அப்பாப் பள்ளி, நவாபு பள்ளி, வாத்தியாப்பள்ளி வரிசையில் பரங்கிப்பேட்டையின் 8-வது ஜூம்ஆ பள்ளியாக காதிரியாப் பள்ளி உதயமாகியுள்ளது
நன்றி:mypno










0 கருத்துகள்:
கருத்துரையிடுக