
கலெக்டர் சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றிச்செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சாலை இடது புறத்தில் ஓரமாக நிறுத்தி மாணவர்களை இறக்கி, ஏற்றிச் செல்ல வேண்டும். அதே போல் பள்ளி மாணவர்களை படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ய அனுமதிக்காமல் பஸ்களை இயக்க வேண்டும். ஓட்டுனர்கள் இது போன்ற நடைமுறைகளை கடைபிடிக்காமல் சாலையில் மையப் பகுதிகளில் மாணவர்களை ஏற்றியும், இறக்கியும், செல்வதால் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, மோட்டார் வாகன சட்டத்தில் அறிவுறுத்தியுள்ளபடி மாணவர்களை பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்வதைத் தவிர்க்கவும், பஸ்கள் சாலையோரத்தில் நிறுத்தி போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இன்றி மாணவர்களை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும்.மேலும், பஸ் உரிமையாளர்கள் தங்கள் ஓட்டுனர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, கடலூர் மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட உதவிடவேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக