துபாய் :துபாயில் விபத்துகளை தவிர்க்க முக்கிய சாலைகளில் செல்லும் முஸ்லீம் டிரைவர்களுக்கு நோன்பு திறக்க இலவசமாக விருந்து அளிக்கப்படுகிறது.
அரபு நாடுகளில் டிரைவர் வேலை பார்க்கும் முஸ்லீம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கையில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் வேலை நெருங்க நெருங்க மஹ்ரிப் தொழுகை நேரத்திற்குள் பள்ளிவாசலை அடைய வேண்டி வேகமாக வாகனத்தை ஓட்டுகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள்... ஏற்படுகின்றன.

இது போன்ற விபத்துகளை தடுக்க துபாயைச் சேர்ந்த அல் இஹ்சான் என்ற தொண்டு நிறுவனம் ரம்தான் அமன் எனும் சேவை செய்ய முடிவு செய்தது. அதன்படி நாட்டின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஓட்டும் நோன்பாளி டிரைவர்களுக்கு இஃப்தார் நேரத்தில் இலவசமாக விருந்து அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளது.
இதனால் நோன்பாளி டிரைவர்கள் நோன்பை திறக்க பள்ளிவாசல் நோக்கி வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதை தடுக்க முடியும்.
விபத்தில்லா ரமலானை நோக்கி ரமலான் அமன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. அல் இஹ்சான் வாகனங்கள் இஃப்தார் நேரத்தில் சாலையோரங்களில் வாகனங்களில் உணவுப் பொருட்களை வைத்து காத்திருக்கும். சாலையில் செல்லும் டிரைவர்கள் அல் இஹ்சான் வாகனங்களை அணுகி இலவச விருந்துடன் நோன்பு திறக்கலாம்.
மேலும் அவ்த் மதீனா, அல் குசைஸ் மற்றும் பழைய அல் குவோஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நோன்பு திறக்க இலவச விருந்து அளிக்கும் 'உங்களுடன்' திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான பேருந்து அந்த பகுதிகளுக்கு சென்று ஏழை மக்களுக்கு உணவு பொருட்களை அளிக்கும். இது தவிர அல் குபைபா, கோல்ட் சூக், அல் கிஸஸ் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் புர்ஜ்மான், யூனியன் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு இலவச இஃப்தார் விருந்து அளிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக