புதன், 16 ஜூலை, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கலெக்டரிடம் புகார் மனு


கடலூர்: சிதம்பரம் அருகே ஊர் நீக்கம் மற்றும் அபராதம் விதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மாவட்டத் தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலெக்டரை சந்தித்து கொடுத்த மனு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வரதட்சணை, மூடநம்பிக்கை, வட்டி ஒழித்தல், ரத்தானம், மருத்துவ முகாம், மது, புகைப்பிடித்தல் தொடர்பான தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் ஜமா அத்தில் எங்கள் கிளை நிர்வாகிகளை அழைத்து எங்கள் ஊரில் இந்த அமைப்பு இருக்கக் கூடாது என மிரட்டியும், தாக்கவும் முயற்சித்தனர். இதை தட்டிக்கேட்டவர்களை ஊரை விட்டு நீக்கம் செய்து விட்டனர். மீண்டும் சேர்வதாக இருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு ஊர் ஜமா அத்தில் சேர வேண்டும் எனவும், அதுவரை ஊரிலிருந்து யாரும் உங்களுடன் பேசவோ, பழகவோ மாட்டார்கள் எனக் கூறி விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக