சென்னை :பாலஸ்தீனத்தின் காஸா நகர் மீது கடந்த ஒரு வார காலமாக இஸ்ரேலிய பயங்கரவாத அரசு, ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட இதுவரை சுமார் 200 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
புனித ரமலான் மாதத்தில் பாலஸ்தீனர்கள் உண்ணா நோன்பிலும், ஆன்மீக செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வேளையில், இஸ்ரேலின் தாக்குதல்கள் மனிதாபிமானத்துக்கு வேட்டு வைப்பதாக உள்ளது.
இந்த அநீதியைக் கண்டித்து சென்னை உட்பட, தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் தமுமுக சார்பில் நேற்று (15.07.2014) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் தலைமை வகித்து கண்டன உரை ஆற்றினார். துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா முன்னிலை வகித்தார்.
மாநிலச் செயலாளர் மீரான் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் நெய்னா முகம்மது, வடசென்னை மாவட்டத் தலைவர் எப். உஸ்மான் அலி, மாவட்டச் செயலாளர் தாஹா நவீன் உட்பட ஏராளமான தமுமுக தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினார்…
0 கருத்துகள்:
கருத்துரையிடுக