காஸா:காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது.
18-வது நாளாக நேற்று காஸாவின் பல்வேறு இடங்களில் ஏவுகணை வீச்சுகளும், குண்டுவீச்சுகளும் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்டன.
நேற்றைய தாக்குதலில் மட்டும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் அவசரகால உதவி மையத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப்-அல்-காத்ரா தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 32 இஸ்ரேல் ராணுவத்தினரும், 3 அப்பாவி பொதுமக்களும், தாய் நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.










0 கருத்துகள்:
கருத்துரையிடுக