செவ்வாய், 8 ஜூலை, 2014

4.8 கோடி சதுர அடி பரப்பளவில் துபாயில் உருவாகும் மிகப் பெரிய வணிக வளாகம்


துபாய் :துபாயில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வணிக வளாகங்கள், ஆடம்பர ஓட்டல்கள் போன்றவை உள்ளன. இங்கு உலகிலேயே மிக உயரமான ‘புர்ஜ்கலியா’ என்ற கட்டிடமும் உள்ளது.
இந்த நிலையில் தற்போது (mall of the world. Dubai) உலகிலேயே மிக பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இது 4 கோடியே 80 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது.
இந்த வளாகத்தில் ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. அவை தவிர இந்த வணிக வளாகத்துக்குள் மிக பிரமாண்டமான பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதன் மீது கண்ணாடி கோபுரமும் ஏற்படுத்தப்படுகிறது. வணிக வளாகத்துக்குள் 7 கி.மீட்டர் தூரம் உந்து வண்டி மூலம் பயணம் செய்யும் வசதி செய்யப்படும். கோடை காலத்தில் இந்த வளாகம் முழுவதும் ஏர்கண்டிசன் செய்யப்படுகிறது. இங்கு கேளிக்கை விளையாட்டு பூங்காக்களும் அமைக்கப்படுகிறது.
இந்த தகவலை துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் தெரிவித்துள்ளார். சுற்றுலாவை மேம்படுத்தவே இந்த வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாக அவர் கூறினார்.





















 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக