பரங்கிப்பேட்டை: ஹிஜ்ரி 1435 (2014) ஆண்டின் ரமலான் மாதம் நேற்று நிறைவடைந்ததையொட்டி, இன்று பரங்கிப்பேட்டையில் சந்தோஷம், உற்சாகம், மகிழ்ச்சி, குதூகலத்துடன் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, இன்று காலை 8.30 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. TNTJ திடல் தொழுகை!
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் பரங்கிப்பேட்டை நகர கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழகை மர்கஸ் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது. இன்று காலை 7.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதனை தொடர்ந்து A. யூசுப் அலி குத்பா உரை நிகழ்த்தினார் இதில் ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர்.
வாத்தியாப்பள்ளி திடல் தொழுகை!
வாத்தியாப்பள்ளி (திடலில்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்புப் பெருநாள் இன்று காலை 7.45 மணிக்கு தொழுகை சிறப்பாக நடைப்பெற்றது. அதன் பின் குத்பா உரை நிகழ்த்தப்பட்டது இதில் ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர்.





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக