தேவையான பொருட்கள்
தரமான பாஸ்மதி அரிசி – 4 கப்
சிக்கன் – ½ கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
நச்சீரக தூள் – ½ தேக்கரண்டி
மல்லித்தூள் – ½ தேக்கரண்டி
மிளகுதூள் - ¼ தேக்கரண்டி
பசைமிளகாய் - 2
பட்டை – 2
ஏலம் – 4 to 6
பிரிஞ்சி இலை (bay leaves) - 3
கிராம்பு – 3
முழு சீரகம்- 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2 பெரியது
எண்ணெய் + நெய் – 2 மேசைக்கரண்டி
தயிர் - 2 கப்
புதினா – 1 கப்
மல்லி - 1 கப்
இளம் சூடான பால் – ½ கப் பால்
குங்குமப்பூ
உப்பு – தேவைக்கு
எலுமிச்சை சாறு – தேவைக்கு
செய்முறை விளக்கம்
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து பிறகு அதை எண்ணெயில் பொறித்து பொன்முருவளாக எடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சுத்தப்படுத்திய சிக்கன், மேலே கொடுத்திருக்கும் அனைத்து வகை மசாலா தூள்கள், பட்டை , ஏலம், பிரிஞ்சி இலை, கிராம்பு, முழு சீரகம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது, எண்ணெய் + நெய் பாதியளவு, புதினா – மல்லி பாதியளவு, தயிர் , பொறித்து வைத்திருக்கும் வெங்காயத்தில் முக்கால் பகுதி, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் நன்றாக கையால் கலந்துமுப்பது நிமிடம் ஊறவிடவும்.
இதற்கிடையில், ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் எடுத்து தண்ணீரில் சிறிது முழு நச்சீரகம், ஒரு பிரிஞ்சி இலை, பட்டை ஏலம், தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும். அரிசியை சேர்க்கவும். அரிசியை பாதி பகுதி மட்டும் வேகவிட்டு வடிகட்டி எடுத்து வைக்கவும்.
ஒரு அடிகனமான அகன்ற பாத்திரத்தில் ஊறவைத்திருக்கும் சிக்கன் கலவையை பரப்பினார் போல சமப்படுத்தி வைக்கவும். அதன் மேல் வடிகட்டி வைத்திருக்கும் அரிசியை சிக்கன் மேலே போட்டு சமப்படுத்தவும். அதன் மேல் மீதமிருக்கும் மல்லிபுதினா மற்றும் பொறித்த வெங்காயம், பரவலாக போடவும். கடைசியாக பாலில் சிறிது குங்குமப்பூவை கரைத்து சுற்றிவர ஊற்றவும்.
இப்போது நீராவி வெளியே போகாமல் காற்று புகாதவாறு மூடியிட்டு 30 – 45 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடவும்.
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் இப்போது பிரியாணி மணம் மூக்கை துளைக்கும். இந்நேரம் பிரயாணி தயாராகி இருக்கும். மூடியை திறந்து அடியிலிருந்து மேலாக அரிசியை உடையாமல் பக்குவமாக கிளறி விட்டு பின்பு சுடச்சுட பரிமாறவும்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக