வெள்ளி, 18 ஜூலை, 2014

நமதூர் திண்ணை முகநூல் குழுமத்தில் பல் மருத்துவம் பற்றிய சிறப்பு கேள்வி – பதில்கள்

கடலூர் மற்றும் பரங்கிபேட்டை மக்களின் பெரு மதிப்பை பெற்ற பொழுதுபோக்கு மற்றும் அன்றாட பயனுள்ள செய்திகளை தொகுத்து வழங்கும் திண்ணை முக நூல் குழுமத்தில் கடந்த ஜூலை 12மற்றும் 13 தேதிகளில் பல்/ஈறு /தாடை மற்றும் வாய் போன்ற நோய்கள் குறித்த கேள்வி கருத்து அரங்கம் திண்ணை முகநூளில் நடைபெற்றது ..

இதில் டாக்டர் N.M ஷாஹுல் ஹமீத் (BDS, MPH-ஆஸ்திரேலியா )அவர்கள் கலந்து கொண்டார் அதன் சமயம் கடலூர் மற்றும் பரங்கிபேட்டை சார்ந்த வெளிநாடுகள் மற்றும் உள்ளூர் களில் வசிக்கும் பலரும் தங்கள்
கேள்விகளை பகிர்ந்தனர் ...ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான விளக்கம் மற்றும் புகைப்படங்களுடன் டாக்டர் அவர்கள் விவரித்து பதில் அளித்தார் ..

இதில் ஈறுகளில் ஏற்படும் கேன்சர் , கர்ப்பிணி பெண்களின் சொத்தை பற்கள் , சர்க்கரை நோயாளிகளின் பற்கள் , சொத்தை பல் ,மற்றும் பல் சுத்தம் , நாற்றம் என பலதரப்பட்ட முக்கிய கேள்விகளும் இடம் பெற்று இருந்தன ... இந்த நிகழ்ச்சியே ஊர் மக்கள் பயன்பெறும் வகையில் திண்ணை குழுமத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் கடலூர் யாசீன் , ஸ்மார்ட் தமிம் , அப்துல் பாசித் , ஹம்துன் அஷ்ரப் , கடலூர் ஷாகுல் , ஜி .நிஜாம் போன்றோர் ஏற்பாடு செய்து இருந்தனர்

கேள்வி – பதில்கள் கிழே வருமாறு

கேள்வி . பற்களில் மற்றும் ஈறுகளில் புற்று நோய் (கேன்சர் ) ஏற்பட வாய்புகள் உள்ளனவா?
அப்துர் ரஹ்மான் அபு ஹனிபா - பரங்கிபேட்டை

பதில்:
டாக்டர் N.M ஷாஹுல் ஹமீத் (BDS, MPH-ஆஸ்திரேலியா )
திண்ணை குழுமம் அனைவருக்கும் என் நன்றியையும், வாழ்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு மேலும் எந்த சந்தேகங்கள் இருந்தாலும், என்னிடம் கேட்களாம்.


முதலில் வாயில் வரக்கூடிய புற்று நோய்களைப் பார்ப்போம். புற்று நோய் உதடு, நாக்கு, கன்னம், வாயின் அடிப் பகுதி, (FLOOR OF THE MOUTH), வாயின் மேர் பகுதி (hard and soft palate) , ஈறு, தாடை எலும்பு, தொண்டை, சைனஸ் இவைகளில் வரலாம். வீக்கம், கட்டி, தடிமன், சொரசொரப்பு, வெள்ளை, சிவப்பு patches ஆகவும் வரலாம். வாயில் புண் இரு வாரங்களுக்கு மேல் இருந்தால் உடனே கவனிக்க வேண்டும். முக்கிய காரணம் புகை பிடித்தல், குட்கா, பான் பராக், புகயிலை போன்றவற்றை பயன்படுதுதல், மது உபயோகித்தல், அடுத்தது CONSTANT IRRITATION BY கூறான பல் மற்றும் DENTURE. . அடிக்கடி கன்னம், உதட்டை கடிப்பதால் அல்லது கூரான பல், மற்றும் DENTURE நாக்கு, கன்னம், உதட்டை தொடர்ந்து உரசிக்கொண்டு இருந்தால், கேன்சர் அல்லது அதன் முன்னோடி ( pre malignant or malignant lesions ) வரலாம். பல்லில் கேன்சர் வருவது அபூர்வம். pulp polyp கட்டி போல் வரும். அதற்க்கு வேர் சிகிட்சை (ROOT CANAL TREATMENT) அல்லது பல்லை எடுத்தால் போதும். கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தால், ஈறில் கட்டி போல் வரலாம். – EPULIS மூலம் அதை சுலபமாக எடுத்து விடலாம்.எனவே பற்களில் கேன்சர் ஏற்படுவது அபூர்வமான செயலே ஆகும்



வாயில் வரும் pre malignant or malignant lesions



pre malignant or malignant lesions

 
 
கேள்வி :கர்ப்பிணி  பெண்களுக்கு சொத்தை பற்கள் இருந்தால் பிறக்கப் போகும் அவர்களின் சேய் பாதிப்பு  உள்ளாகும ?
செயத் உமர் - தமாம் (சவூதி அரேபியா )

 

டாக்டர் பதில்:
கர்ப்பிணி பெண்களுக்கு சொத்தை பற்கள் இருந்தால் அவர்களுடைய oral health improve செய்ய வேண்டும். சொத்தை உண்டாக்கும் பேக்டீரியாவைக் குறைத்தால், அது குழந்தைக்குப் போகாது. குழந்தைக்கு சொத்தை வரும் risk குறையும். தினமும் இரு முறை பல் தேய்க்கவும், FLOSSING செய்யவும். பல் சிகிச்சை இரண்டாம் trimester ல் செய்வது நல்லது.


அவசரம் என்றால் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கர்ப்பம் சமயத்தில் செய்யக்கூடாது என்று ஒன்றும் இல்லை.
மருந்துகள், X RAY தவிர்ப்பது நல்லது. அவசியமானால், X RAY எடுக்கும் போது LEAD APRON உபயோகிக்க வேண்டும். SIDE EFFECTS குறைவாக உள்ள மருந்துகள் எடுக்களாம்.

 
 
கேள்வி: Can  explain about wisdom tooth since 1 year iam suffering from  wisdom tooth its
not ejected  in x X RAY it  shows the teeth grows in side way often getting sore thrott  wisdom tooth ?
 
wisdom tooth (ஞான பல் ) பற்றி விளக்கவும்  கடந்த ஒரு ஆண்டுகளாக  எனக்கு  இந்த பாதிப்பு உள்ளது  அதை  கழட்டவும் முடியவில்லை  X RAY  வில்  பக்க வாட்டில்  வளர்வது போல்  உள்ளது  இதனால் அடிகடி வலி அதிகமாக உள்ளது?
முஹம்மத் வலீத் - கடலூர் துறைமுகம்
 
டாக்டர் பதில்:
தம்பி WALEED க்கு - தங்கள் வயது என்ன?
wisdom tooth ... 18 முதல் 25 வயதில் வரும். இடப் பற்றாக்குறையால், பலருக்கு சிரமம் வரும். லேசான வெண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு அடிக்கடி வாய் கொப்பளித்தாலே நல்ல பயன் கிட்டும். GENGIGEL,BONJELA, SOLCOCERYL ORAL GEL போன்ற ஜெல்லை அங்கு தடவி 10 – 15 நிமிடம் கழித்து வாய் கொப்பளித்தால் நல்ல RELIEF கிடைக்கும்.
சில சமயம் குருக்கே முளைத்தால் வெளியே வர வாய்ப்பு இல்லை. சர்ஜரி செய்து வெளியே எடுக்கும் படி நேரலாம். X RAY ANUPPINAAL பார்த்து சொல்கிறேன். சில நேரம் உபயோகம் இல்லாத OPPOSITE பல்லை எடுத்தால் கூட போதும்.

ஈறு பல்லுக்கு மேல் வீங்கி இருந்தால். Pericoronitis. பல் வெளி வரமுடியாமல் இருந்தால் impaction. அதில். Vertical horizontal, Mesio angular, disto angular என types உண்டு
வலிக்கு. Crocin or panadol ( paraacetomol ) or brufen. சாப்பிடவும்.
வலி / வீக்கம் தொடர்ந்து இருந்தால் Augmentin. போன்ற antibiotic சாப்பிட வேண்டும். Dose. எடை. 60 kg வரை. 375 mg, 60 க்கு. மேல். 625 mg. 3 நேரம் 3. நாள்
ரமலானில். 3 வேளை சாப்பிடுவது சிரமம் dose ஐ கூட்டி 2 வே ளை சாப்பிடலாம்
1கி இரு வேளை
 
கேள்வி:பற்கள் பிரஷ் செய்யும் போது எப்போதும் (bleeding) பிளீடிங் ஏற்படுகிறது...அதை எப்படி சரி செய்வது?
பொறியாளர் ..நௌசாத் அலி - அல்கோபார்
 
டாக்டர் பதில்:
இரத்தம் வருவதற்க்கு முக்கிய காரணம் – ஈறு பலமில்லாமல் இருப்பது - காரை படிவதால் ஏற்படும் GUM INFLAMMATION ஆகும்.
மற்றவை – பிரஷினால் அழுத்தி தேய்ப்பது, HARD BRUSH உபயோகிப்பது,
கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தால் வரலாம்.
RARELY சில blood disorder இருந்தாலும் வரும்.
பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் சிறிய sulcus என்ற இடைவெளி இருக்கும். அதில் சாப்பிட்ட பொருட்கள் மாட்டி gum infection or gingivitis வரலாம்.
பல்லின் மேல்,Plaque என்கிற பேக்டீரியா லேயர் உண்டாகும். அது கெட்டியாகி காரை ஆகும். அது ஈறை புண்ணாக்கி INFECTION வரலாம். அதை அப்படியே விட்டால், ஈறு பல்லை விட்டு விலகி, பல்லை பிடித்து இருக்கும் எலும்பும் தேய்ந்து, இடுக்கு விழும், பல் ஆட்டம் கொடுக்கும்.
நான் ஏற்கன்வே சொன்னது போல், எப்போதும் பற்களை தூய்மையுடனும் பாதுகாப்புடனும் வைப்பது மிகவும் அவசியம்.
BRUSHING முறை : தினமும் இரு முறை பல் தேய்க்கவும். காலையும், இரவில் படுப்பதற்க்கு முன்பாகவும். அதன் பிறகு எதுவும் சாப்பிடக் கூடாது,
BRUSH - BRISTLE – SOFT ஆகவும், STRAIGHT ஆகவும் இருக்க வேண்டும்.
சிறிய HEAD நல்லது. CURAPROX - SUPER SOFT OR ULTRA SOFT, SENSODYNE ULTRA SENSITIVE, COLGATE SLIM SOFT போன்றவை.
பிரஷ் செய்யும்போது, ஈறுலிருந்து பல்லுக்கு கொண்டு வரணும்.
மேல் தாடையில் மேலிருந்து கீழாகவும், (வெளி பக்கம்,உட்பக்கம் )
கீழ் தாடையில் கீழிருந்து மேலாகவும், கடிக்கும் பகுதியில் – குறுக்கும் நெடுக்குமாக அல்லது சிறிய ROTARY MOVEMENT – சுத்துவது போல் செய்யணும்.
பல் விலக்கும் போது, ஈறையும் பிரஷ்ஷால் மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி செய்யும் போது, சில நாட்கள் அதிக மாக ரத்தமும், வலியும் வரலாம்.
தொடர்ந்து ஈறை மசாஜ் செய்யும் போது, ஈறு பலமாகி ரத்தம் வருவது நின்று விடும்.
பல்லில் , ஈறில் அழுக்கு படியாது, சொத்தையும் வராது.

FLOSSING - பிரஷ் பற்களின் இடையேயுள்ள இடை வெளிகளை சரியாக சுத்தம் செய்யாது. அதர்க்கு FLOSS எனப்படும் மெழுகு நூலை உபயோகிக்கவும்.
INTER DENTAL BRUSH - FLASK கழுகும் பிருஷ் போல இருக்கும். இதன் மூலமும் பல்லின் இடையே சுத்தம் செய்யலாம்.
ஈறை பலப்படுத்த, PARODIUM GEL OR GUM TONE GEL லை நன்கு மசாஜ் செய்து 15 – 20 நிமிடம் வைத்து இருந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
அடிக்கடி வெண்ணீரில் கொஞ்சமாக உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் நல்லது.
CHLOREHIXIDINE கலந்த TOOTH PASTE – (CURASEPT 0.2% GEL TOOTH PASTE) MOUTH WASH - ( CURASEPT 0.2% ) நாளைக்கு ஓரிறு முறை, கொஞ்ச நாட்கள் உபயோகிக்களாம்.
முக்கியமாக, பல் மருத்தவரிடம் சென்று, பல்லை சுத்தப்படித்துக் கொள்ள வேண்டும். ரொம்ப INFECTION இருந்தால் மட்டும் ANTIBIOTIC உபயோகிக்க வேண்டும்.
ஒரு டெமொ கொடுக்க முயற்ச்சிக்கிறேன்

 
 
 
 
INTER DENTAL BRUSHES

கேள்வி:பலஹீனமான பற்களை எப்படி வலுபடுத்துவது  ?சொத்தை பற்கள் ஏற்பட எது காரணமாக அமைகின்றன?
ஜமால் மரைக்கார். துபாய்
 
டாக்டர் பதில்:
பலஹீனமான பற்கள் – ஆடும் பற்களா ? சொத்தையை சொல்கிறீர்களா?
வாயில் மில்லியன் கணக்கில் பேக்டீரியா உள்ளது
பெரும்பாலும் பற்களில் ஒட்டி யிருக்கும் சிப்ஸ், பிஸ்கட், சாக்லேட், பிரெட் போன்ற உணவுப் பொருட்களால் இவை அதிகமாகி, அது உண்டாக்கும் அமிலத்தால் பற்களில் சொத்தை உண்டாகிறது.
தினமும் இரு முறை பல் தேய்க்கவும். FLOSSING செய்யவும்.
ஈறு வீக்கானால், இரத்தம் வரும், பல் ஆட ஆரம்பிக்கும்.
BRUSH - BRISTLE – SOFT ஆகவும், STRAIGHT ஆகவும் இருக்க வேண்டும்.
சிறிய HEAD நல்லது. CURAPROX - SUPER SOFT OR ULTRA SOFT, SENSODYNE ULTRA SENSITIVE, COLGATE SLIM SOFT போன்றவை.
பிரஷ் செய்யும்போது, ஈறுலிருந்து பல்லுக்கு கொண்டு வரணும்.
மேல் தாடையில் மேலிருந்து கீழாகவும், (வெளி பக்கம்,உட்பக்கம் )
கீழ் தாடையில் கீழிருந்து மேலாகவும், கடிக்கும் பகுதியில் – குறுக்கும் நெடுக்குமாக அல்லது சிறிய ROTARY MOVEMENT – சுத்துவது போல் செய்யணும்.
பல் விலக்கும் போது, ஈறையும் பிரஷ்ஷால் மசாஜ் செய்ய வேண்டும்.
ஈறை பலப்படுத்த, PARODIUM GEL OR GUM TONE GEL லை நன்கு மசாஜ் செய்து 15 – 20 நிமிடம் வைத்து இருந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
அடிக்கடி வெண்ணீரில் கொஞ்சமாக உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் நல்லது.
MOUTH WASH நாளைக்கு ஓரிறு முறை உப்யோகிக்களாம்.
FLOSSING - பிரஷ் பற்களின் இடையேயுள்ள இடை வெளிகளை சரியாக சுத்தம் செய்யாது. அதற்க்கு FLOSS எனப்படும் மெழுகு நூலை உபயோகிக்கவும்.
INTER DENTAL BRUSH - FLASK கழுகும் பிருஷ் போல இருக்கும். இதன் மூலமும் பல்லின் இடையே சுத்தம் செய்யலாம்.
 
கேள்வி:நான் tooth bridge   செய்து உள்ளேன்  எவ்வளவு காலம் வரை அதை கழட்டாமல் இருக்கலாம் அதை புதிதாக மாற்றிக்கொள்ள கால அளவு ஏதும் உள்ளதா? மேலும் அந்த bridge   செய்த பல்லில் இடுக்கு விழாமல் பாதுகாப்பது எப்படி ?
ஜபார் சாதிக் .சிங்கப்பூர்
 
டாக்டர் பதில்:
tooth bridge - நாமாக கழட்ட வேண்டியது இல்லை.
METAL CERAMIC ஆ? ( உள்ளே சில்வெர் போன்றும், வெளியில் பல் நிறத்தில் செராமிக் இருக்கும் ) OR ZIRCON ஆ? முழுவதும் பல் நிறத்தில் இருக்கும்.
சரியான CLEARANCE SPACE ( 5 – 7 mm ) மேல் பல்லுக்கும் கீழ் பல்லுக்கும் இருந்தால், CROWN OR BRIDGE , நல்ல மொத்தமாக இருக்கும்.
10 – 15 வருடங்கள் கூட வரும். அதற்க்கு SUPPORTING பல்லை, நிறைய தேய்க்க வேண்டி இருக்கும். வேர் சிகிட்சை செய்த பல்லானால், பிரட்சனை வராது. இல்லவிடில், கூச்சம், வலி வரலாம்.
அதற்க்காக THIN ஆக வைத்தால், சீக்கிரம் உடையலாம்.
CROWN LENGTH குறைவாக இருந்தால், பிடுப்பு குறையும்.
HIGH POINT ஏதவது இடத்தில் இருந்தால், கடிக்கும் போது அதிக FORCE அங்கு போய் செராமிக் உடைய வாய்ப்பு உள்ளது.
லூசாகி கழன்று வந்தால், மீண்டும் சிமெண்ட் போட்டு FIX செய்யலாம்.
BRIDGE ஆக இருந்தாலும், FILLING AAGA இருந்தாலும், நடுவில் கொஞ்சம்
CONTACT POINT விட்டு சிறிய இடைவெளி (NATURAL பல் போல) இருக்கணும்.
அப்பொது தான் FLOSS OR INTER DENTAL BRUSH - (FLASK கழுகும் பிருஷ் போல இருக்கும்). மூலம் பல்லின் இடையே சுத்தம் செய்யலாம்.
முடிந்த வரை எலும்பு போன்ற மிகவும் கடினமான பொருட்களை கடிப்பதை தவிர்க்கணும்.
பல், ஈறு சுத்தமாக வைக்கவும். தினமும் இரு முறை பல் தேய்க்கவும்.
இடுக்கு விழாமல் இருக்க பற்கள் மற்றும் பிரிட்ஜ்க்கு இடையே பல் குத்தும் குச்சி, பின் போன்றவை உபயோகிக்க கூடாது.
FLOSSING செய்யவும். BRIDGE அடியில் FLOSS மூலம் சுத்தம் செய்ய bridge floss threader கிடைக்கும். அதன் போட்டோ அனுப்பிகிறேன்.
மிக சிறிய INTER DENTAL BRUSH ம் உபயோகிக்கலாம்.
 

கேள்வி:பல் கட்டுவது பற்றி சற்று விரிவான விளக்கம் தேவை ? சொத்தை பல் வந்து விட்டால் பிடுங்கி எறிவது தான் மருத்துவ தீர்வா ? பல்லை எடுக்காமல் வலியை போக்க (பூச்சியை கொள்ள) நிரந்தர தீர்வு இல்லையா ?
ஜி .நிஜாம் ..ரியாத் (Gn voice)

டாக்டர் பதில்:
செயற்க்கை பற்களைப் DENTURE பொருத்திக் கொள்வது .
அ) தினமும் வெளியில் எடுத்து சுத்தம் செய்து மாட்டுவது. – REMOVABLE ARTIFICIAL DENTURE - ஒரு பல்லாக இருந்தாலும், FULL SET ஆக இருந்தாலும் இது போல் கட்டலாம். பொதுவாக மற்ற பற்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை.
போட்ட கொஞ்ச நாட்களுக்கு கஸ்டமாக இருக்கும் – பேச, சாப்பிட.
ஒரு வாரத்தில் சரியாகி விடும்.
இதை சில பேர் கழட்டாமலெயே வாயில் வைத்திருப்பர்கள். அப்போது மற்ற பற்களுக்கும், ஈறுக்கும் கெடுதல் வரும். ஓரிறு நாட்கள் வெளி இடத்துக்குப் போனால், பரவாயில்லை. வீட்டில் இருக்கும் போது இரவில் கழட்டி நீரில் போட்டு வைக்கவும். DENTURE CLEANER OR DETTOL போட்டால் நல்லது.
இதில் 2 வகை உண்டு . ACRYLIC – பிளஸ்டிக் - மிகவும் விலை குறைவு.
CHROME COBALT – METAL + ACRYLIC சேர்ந்து இருக்கும். விலை கொஞ்சம் அதிகம். MORE COMFORTABLE.

 
 
 

 
 



ஆ) FIXED - CROWN & BRIDGE இரண்டு பக்கத்தில் உள்ள பற்களையும் தேய்த்து, அதிலிருந்து சப்போர்ட் எடுத்து செய்வது. METAL CERAMIC ( உள்ளே சில்வெர் போன்றும், வெளியில் பல் நிறத்தில் செராமிக் இருக்கும் ) OR ZIRCON முழுவதும் பல் நிறத்தில் இருக்கும்.
1 - 2 பற்கள் வைக்க , 2 சப்போர்ட் போதும். அதிக பட்சம் 3 வைக்கலாம்.
5 -6 பல்லுக்கு 2 சப்போர்ட் வைத்தால், கடிக்கும் போது அதிக FORCE அந்த 2 பல்லுக்கு போய் கேடு நேரலாம்.
இ) IMPLANTS நேராக எலும்பிலிருந்து SUPPORT எடுத்து செய்வது
இதில் மற்ற பல்லுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விலை தான் அதிகம்.
3 டி ஸ்கேன் எல்லாம் செய்து, implant – எவ்வளவு நீளம், THICKNESS, எந்த இடத்தில் வைத்தால் நல்லது என்று பக்காவாக PLAN செய்து செய்யலாம். SIMPLE ஆக வெறும் X RAY வைத்தும் செய்கிறார்கள்.
எதுவானாலும், FAILURE க்கு வாய்ப்பு உண்டு.
11 Gn Voice சொத்தைப் பல் வந்து விட்டால் “புடிங்கி எறிவது”தான் மருத்துவ தீர்வா...? பல்லை எடுக்காமல் வலியைப் போக்க (பூச்சியைக் கொல்ல) நிரந்தர தீர்வில்லையா...
பூச்சியைக் கொல்ல பூச்சி மருந்து அடிக்கலாமா? JUST JOKING.
பூச்சியை எடுப்பதாக சொல்லி காதில் மருந்து ஊத்தி வாயில் இருந்து புழு எடுப்பதாக SHOW காட்டுவார்கள். பூச்சியைக் கொல்ல தேவையில்லை, முடியவும் முடியாது. வாயில் மில்லியன் கணக்கில் பேக்டீரியா உள்ளது. பல உபயோகமானது கூட.
சொத்தைப் பல் வந்து விட்டால் “புடிங்கி எறிவது” கடைசி தீர்வு.
பற்களில் சொத்தையிருப்பின், வலி வரும் வரை காத்திராமல் குறைந்த அளவு ஓட்டை உள்ள போதே அடைத்துக் கொள்ள வேண்டும். வலி, அழைச்சல், சிலவு எல்லாம் குறைவு, சிறிய ஓட்டை என்றால், முதல் முறையே permanent ஆக அடைத்துவிடலாம். DEEP ஆக வேருக்கு அருகில் இருந்தால், சில நேரம் TEMPORARY
கிருமிகள் பாதிப்பு அதிகம் உள்ள பற்களை – வலி, வீக்கம் இருந்தாலும், வேர் சிகிட்சை (ROOT CANAL TREATMENT) மூலம் பாது காக்க வேண்டும்.


      
 
 
 
 
 
 
 
 
 
 
கேள்வி:சர்க்கரை நோயாளிகளின் பற்கள் அதிகம் பாதிக்கப்படுமா ? ஏனெனில் அவை எந்த காரணத்தின் அடிப்படையில் இருக்கும் ?
தஸ்லீம் .பரங்கிபேட்டை
 
டாக்டர் பதில்:
சர்க்கரை நோயாளிகளின் பற்கள், ஈறு, பற்களை தாங்கி இருக்கும் எழும்பு ,அதிகம் பாதிக்கப்படும். அவர்களுக்கு , நம் வாயில் மில்லியன் கணக்கில் உள்ள பேக்டிரீயாக்களால் பாதிப்பு அதிகம்.
சர்க்கரை நோய் ஈறுக்கான இரத்த ஓட்டத்தை குறைப்பதால், ஈறு புண்ணாகும் வாய்ப்பு அதிகம். மேலும் உமிழ் நீர் குறைந்து ( DRY MOUTH - உலர்ந்த வாய் ) சொத்தை உண்டாக்கும் பேக்டிரீயாக்களும் காறையும் அதிகமாகி, பல், ஈறு ப்ரச்னை உண்டாகும். இறத்தம் வடிதல், வாய் துற் நாற்றமும் வரும்.
பல், ஈறு சுத்தமாக வைக்கவும். தினமும் இரு முறை பல் தேய்க்கவும். FLOSSING செய்யவும்.
புகைப் பிடிப்பதை நிறுத்தவும். சர்க்கரை அளவை கட்டுப் படுத்தவும்.
காரை இருந்தால், (பெறும் பாலோனோருக்கு நிச்சயம் இருக்கும்) ஈறில் இரத்தம் வந்தாலும், பல் மருத்துவரிடம் போய் பல்லை சுத்தம் செய்யவும்.
பல் எடுக்கும் படி இருந்தால் ANTIBIOTIC சாப்பிட்டு விட்டு எடுக்க வேண்டும், பயப்பட தேவையில்லை.
 
கேள்வி:பல் மருத்துவமனையில் கிளீன் செய்யாமலும் பொட்டசியம் பர் மாங்கநெட் உபயோகிக்காமலும் மஞ்சள் நிற பற்களை தூய வெண்மையாக மாற என்ன செய்ய வேண்டும் ?
இக்பால் முஹம்மது - கத்தார்

டாக்டர் பதில்:
நம்மவர்களுக்கு லேசான மஞ்சள் நிற பற்கள் – இயற்கையானது.
சாப்பாட்டு பொருட்களாலும் சிகரெட், கோக் போன்றவைகளாலும் கலர் மாறுகிறது.
நார் உள்ள crunchy foods நல்லது. சாப்பிட்டபின், டீ குடித்த பின் நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும். GUAGE போன்ற துணி அல்லது வெறும் கைய்யால் பல்லை தேய்த்து விட்டு கொப்பளித்தால் நல்லது.
உப்பு, baking soda, கரித்தூள் போன்றவைகளை வைத்து பல் தேய்த்தால், பளிச்சென்று இருக்கும், ஆனால் எனாமல் தேய்ந்து கூச்சம் உண்டாகும்.
தினமும் இரு முறை பல் தேய்க்கவும். FLOSSING செய்யவும்.
காரை படிந்து இருந்தால் டாக்டரிடம் போய் கிளீன் செய்து தான் ஆக வேண்டும். பொட்டாசியம் பர் மாங்கநேட் உபயோகிக்க வேண்டாம்
TEETH WHITENING செய்யலாம். புளிப்பு வர வாய்ப்பு உள்ளது.


கேள்வி:சொத்தை பற்கள் பிடுங்கிய இடத்தில் தற்போது பல் முளைக்க வில்லை ..இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டா ?
நடுவில் பல் இல்லாமல் இருப்பதால் துணை பற்கள் வலுவிழக்க வாய்ப்பு உண்டா ?

இர்பான் .பரங்கிபேட்டை


டாக்டர் பதில்:
சொத்தை பற்கள் பிடுங்கிய இடத்தில் தற்போது பல் முளைக்க வில்லை - எந்த வயதில்?
பால் பற்கள் (20) என்றால் தான் திரும்ப பல் முளைக்கும்.
PERMANENT (32) பற்கள் ஒரு முறை தான் வரும். அது 6 வயது முதல் வரும்.
முடிந்த வரை சொத்தை கொஞ்சமாக உள்ள போதே அடைத்துக் கொள்வது நல்லது, வலி வரும் வரை காத்திருக்க வேண்டாம்.
அதிகமானால், வேர் சிகிட்சை (ROOT CANAL TREATMENT) மூலம் பாது காக்க வேண்டும்.
அதுவும் முடியாத போது, பற்களை பிடுங்க வேண்டும்.
மாற்றுப் பல் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், பக்கத்தில் உள்ள பற்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பிக்கும்.
குழந்தையாக இருந்தால், அடுத்த புதிய பல் வர இடம் இல்லாமல், கோணலாக வர வாய்ப்பு உண்டு.
எதிரே உள்ள பல் கீழே இறங்க ஆரம்பிக்கும். (மேலே பல் இல்லாவிட்டால் கீழிருந்து மேலே போகும்).
மற்ற பற்கள் வலுவிழக்க வாய்ப்பு உண்டு.
சரியாக சாப்பிடுவதும் கடிணம்.
ஆதலால், DENTURE பொருத்திக் கொள்ளலாம்.
அ) தினமும் வெளியில் எடுத்து சுத்தம் செய்து மாட்டுவது.
ஆ) FIXED - CROWN & BRIDGE பக்கத்து பற்களில் SUPPORT எடுத்து செய்வது
இ) IMPLANTS நேராக எலும்பிலிருந்து SUPPORT எடுத்து செய்வது


கேள்வி:குளுற்சியான நீர் & பொருட்களையோ உண்ணும் பருகும் போது பற்களில் அதிக கூச்சம் வலி ஏற்படுகிறது sensodyne பேஸ்ட் தான் உபயோகிக்கிறேன் இருந்தும் அப்படியேதான் உள்ளது... என்ன செயலாம்?
முஹம்மத் பிலால் .ஷர்ஜா


டாக்டர் பதில்:
பற்களில் அதிக கூச்சம் வலி ஏற்பட காரணம் – பல் சொத்தை, CRACKED TOOTH, எனாமல் தேய்ந்து போவது - முக்கிய காரணம் - பிரஷினால் அழுத்தி தேய்ப்பது, HARD BRUSH உபயோகிப்பது,

உடைந்த FILLING, EXPOSED TOOTH ROOTS –

sensodyne பேஸ்ட் ஓகே. பேஸ்ட்டை கொஞ்சம் கையில் எடுத்து கூசும் இடத்தில் தேய்க்கவும், கொஞ்ச நேரம் வெயிட் செய்து – (3 – 5 நிமிடம்), பிரெஷ் செய்யவும். SOFT BRUSH உபயோகிக்கவும். பிரஷ் செய்யும்போது, ஈறுலிருந்து பல்லுக்கு கொண்டு வரணும். வெளிப்பக்கம் குருக்கே வேகமாக, அழுத்தமாக தேய்ப்பதால், பற்களில் உள்ள எனாமல் தேய்ந்து, TOOTH NECK ல் (பல்லும் ஈறும் சேருமிடத்தில்) குழி போல் வரும், பல் கூச்சம் வரும்.

அப்படியும் கூச்சம் இருந்தால், SENSOGYL என்ற ஜெல் வாங்கி அதை கூசும் இடத்தில் தேய்த்து, 10 – 15 நிமிடம் கழித்து வாய் கொப்பளிக்கவும்.

எனாமல் அதிகம் தேய்ந்து இருந்தாலும், சொத்தை, உடைந்த FILLING இருந்தாலும் அடைக்கணும்.

சில நேரம் CROWN போட வேண்டி இருக்கும்.



கேள்வி:சொத்தைப் பல்லை புடிங்கி எடுப்பது பற்றி சொல்லியுள்ளீர்கள். நன்றி.
எனது தகப்பனார் பல் வலிக்கு மருந்து வைத்து பிறகு அந்த பல்லில் வலியே வராமல் குணப்படுத்தி விடுவதை நான் பல ஆண்டுகள் அனுபவமாக கொண்டவன்.

படிகாரம் உட்பட சிலபொருள்களை காயவைத்து பொடியாக்கி சொத்தைப் பல்லின் உள்ளே அந்த மருந்தை அடைத்து குறைந்தது பத்து நிமிடத்திற்கு பிறகு செத்து போன பூச்சியை எடுத்துக் காட்டுவார்கள். பலமுறை பலருக்கு செய்யும் போது பார்த்து அனுபவம் பெற்றவன். அதனால் தான் நவீன மருத்துவத்தில் இம்முறைப் பற்றி கேட்டேன்.
சொத்தைப் பல் ஏற்படுவதற்கான காரணிகளை இன்னும் கொஞ்சம் விளக்கினால் பலருக்கு பயன்படும்
 Gn Voice

டாக்டர் பதில்:
நான் எழுதிய பதில்கள் மிகவும் நீ..........ளமாக இருப்பதால், பலருக்கு போர் அடிக்கும் என நினைத்தேன்.
சொத்தைப் பல் ஏற்படுவதற்கான காரணிகளை இன்னும் கொஞ்சம் விளக்கினால் பலருக்கு பயன்படும் என்று எழுதி உள்ளீர்கள்.
வாயில் உள்ள பூச்சியை (பேக்டீரியா) பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் தெரியாது. மிகவும் பவரான மைக்ராஸ்கோப் வேண்டும்.
RCT செய்யும் போது, வேரிலிருந்து வெளியில் எடுக்கப் படும் நரம்பு – PULP – NERVE AND BLOOD VESSELS – புழு மாதிரி தெரியும், ஆனால் புழு அல்ல.
பல் வலி வந்தால் அடிக்கடி வெண்ணீரில் கொஞ்சமாக உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் நல்லது, ஐஸ் கட்டிகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் (கீஸ்) போட்டு, கன்னத்தின் மேல் வைத்து வைத்து எடுக்கவும். பல் மருத்துவரிடம் காண்பிக்கவும், அவசரத்திற்கு 2 PANADOL OR BRUFEN சாப்பிடவும். தயவு செய்து கிராம்பு தைலம்,, படிகாரம், டைகர் பாம், கோடாலி தைலம் இவைகளை அந்த இடத்தில் உபயோகிக்க வேண்டாம். தற்காலிக மாக வலியை குறைத்தாலும், பிரச்னைகளை அதிகமாக்கும்.


நன்றி:டாக்டர் N.M ஷாஹுல் ஹமீத் (BDS, MPH-ஆஸ்திரேலியா )
நன்றி:திண்ணை முக நூல் குழுமம்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக