வியாழன், 3 ஜூலை, 2014

நீர் ஆதாரங்களை பல நாடுகளில் பெருக்கி வரும் ஐக்கிய அரபு அமீரகம்


துபாய் :ஐக்கிய அரபு அமீரக  (யுனைடெட் அரப் எமிரேட்ஸ்) அரசானது உலகம் முழுவதிலுமுள்ள ஐந்து மில்லியன் மக்களுக்கு ஏற்படும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முன் வந்துள்ளது. இந்த முயற்சியானது சென்ற சனிக்கிழமை தொடங்கப்பட்டு இது வரை 9.1 மில்லியன் டாலர் அன்பளிப்பாக சேர்ந்துள்ளது. ஜூலை 17க்கு முன்பாக தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு பல முக்கிய கம்பெனிகளை யுஏஇ அரசானது கேட்டுக் கொண்டுள்ளது.

யுனைடெட் அரப் எமிரேட்ஸின் செம்பிறை சங்கமானது இது வரை 10 நாடுகளில் போர்வெல்களை அமைத்து அந்த மக்களின் குடிநீர் பிரச்னையை போக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், நைஜர், சோமாலியா, கானா, சூடான், இந்தோனேஷியா, ஈராக் போன்ற நாடுகள் இதனால் பெரும் பயனை பெற்றுள்ளன.

யுனைடெட் அரப் எமிரேட்ஸ் அரசானது 2003 லிருந்து 2013 வரையிலான கால கட்டத்தில் 1.014 மில்லியன் திர்ஹம்களை செலவழித்து 61 நாடுகளின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்த்து வைத்துள்ளது. இந்த நீர் சம்பந்தமான துறையானது துபாய் அரசர் ஷேக் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இது பற்றி அவர் கூறும் போது 'யுஏஇ ஆனது நன்கொடைகளை வழங்குவதிலும், மனிதாபிமான உதவிகளை தருவதிலும் உலகின் முதல் தர நாடாக உள்ளது' என்கிறார். உலக மீடியாக்கள் ஷேக் ரஷீத் அல் மக்தூமின் மனிதாபிமான உதவிகளை பெரிதும் பாராட்டுகின்றன.

இஸ்லாம் என்பது தொழுகை, நோன்பு என்பதோடு குறுகி விடுவதில்லை. இது போன்ற மனிதாபிமான செயல்பாடுகளை செல்வந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் மனமுவந்து செயல்படுத்த முன் வர வேண்டும். செல்வம் ஓரிடத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பதல்ல இஸ்லாம். எனவே தான் ஏழை வரியான ஜகாத்தை இஸ்லாம் கட்டாய கடமைகளில் ஒன்றாக்கியது. இதே போன்று மற்ற ஆட்சியாளர்களும் தங்களின் பொறுப்புணர்ந்து ஏழை நாடுகளுக்கு உதவ முன் வருவார்களாக!

சவுதி கெஜட்
தமிழில் :சுவனப்பிரியன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக