வியாழன், 3 ஜூலை, 2014

பரங்கிப்பேட்டை அருகே தனியார் பேருந்து, லாரி மோதல்: மூதாட்டி சாவு, 40 பேர் படுகாயம்பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே (இன்று )வியாழக்கிழமை மாலை தனியார் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த 40 பேர் படுகாயமுற்று கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பேருந்தும், சிதம்பரத்திலிருந்து மணல் ஏற்றிச் சென்ற லாரியும் சிதம்பரம் அருகே
சின்னக்குமட்டி எனுமிடத்தில் மோதிக்கொண்டது. இதில் பேருந்து லாரி மீது மோதி சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி கவிழிந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 50 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 40 பேர் காயமுற்றனர். இதில் 23 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 16 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் அறிந்ததும் பரங்கிப்பேட்டை ஜமாஅத் ஆம்புலன்ஸ் உட்பட , தீயணைப்புபடையினரும் விரைவாக மீட்பு பணியில் ஈடுபட்டனர் இறந்து போன மூதாட்டி யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் படுகாயமுற்ற மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (32), ம.புளியங்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் (32), விபீஷணபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் (30), கோவிலாம்பூண்டியைச் சேர்ந்த பார்வதி (32), கொத்தட்டை முத்தம்மாள் (30), பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45), மடுவங்கரையைச் சேர்ந்த சுரேஷ் (35), தில்லைவிடங்கனைச் சேர்ந்த அபிநயா (26), கலைவாணி (28) உள்ளிட்ட 16 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து, மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினார். விபத்தில் இறந்த மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
 
 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக