பாக்தாத்: போராளிக்குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ் (அதவ்லத்துல் இஸ்லாமிய்யா ஃபில் ஈராக் வஷ்ஷாம்) இஸ்லாமிய கிலாஃபத்தை பிரகடனம் செய்வதாக அறிவித்துள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலியாவின் நியூஸ் டாட்காம் தெரிவித்துள்ளது. இந்த கிலாஃபத், வட சிரியாவின் அலெப்போவிலிருந்து கிழக்கு ஈராக்கில் உள்ள தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது.
கலந்தாலோசனைக் குழு(ஷூரா) கூட்டத்தில் கிலாஃபத்தைக் குறித்து விவாதித்து புதிய கிலாஃபத்தை நிறுவவும், கலீஃபாவை அறிவிக்கவும் முடிவுச் செய்யப்பட்டது என்று ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அத்னானி தெரிவித்தார்.போராளிகளின் தலைவரான அபூபக்கர் அல் பாக்தாதி கலீஃபாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாக்தாதி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக அத்னானி தெரிவித்தார்.
ஈராக், லெவண்ட் ஆகிய வார்த்தைகளை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அத்னானி தெரிவித்தார்.கிலாஃபத் அனைத்து முஸ்லிம்களின் கனவும், நம்பிக்கையுமாகும் என்று அத்னானி மேலும் தெரிவித்தார்.
அல்காயிதாவில் இருந்து பிரிந்ததாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஈராக்கின் 2-வது பெரிய நகரமான மொசூலை கைப்பற்றியது.இதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது.
1924-ஆம் ஆண்டு உதுமானிய சாம்ராஜியத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து கிலாஃபத்தும் முடிவுக்கு வந்தது .









0 கருத்துகள்:
கருத்துரையிடுக