பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் மனநிலை பாதித்த பெண் கல்லால் தாக்கி
வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை முன்
பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மனநிலை பாதித்த பெண் ஒருவர் கடந்த ஒரு
மாதமாக தங்கியுள்ளார். அவர், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், பஸ்சுக்காக
காத்துக்கொண்டிருக்கும் பஸ் பயணிகள் உள்ளிட்டவர்களை திடீரென கல்லால் தாக்குகிறார்.
இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லவும் அங்கு நின்று
பஸ் ஏறவும் பொதுமக்கள் அஞ்சுகின்றனர். யாராவது அந்த பெண்ணை விரட்டினால் அங்கிருந்து
சென்றுவிட்டு மீண்டும் அங்கேயே வந்து கல்லால் தாக்குகிறார். எனவே, மனநிலை பாதித்த
பெண்ணை பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்து கவனிக்க தொண்டு நிறுவனம் முன்
வரவேண்டும்.அரசு தரப்பில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக