செவ்வாய், 1 ஜூலை, 2014

சென்னை கட்டிட விபத்து- பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் தொழிலாளர் இன்று மரணமடைந்த நிலையில் இன்னொரு உயிர்ப் பலியும் ஏற்பட்டுள்ளது.4வது நாளாக இன்றும் இடைவிடாமல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
நேற்று இரவு வரை 20 பேர் பலி நேற்று இரவு வரையிலான மீட்புப் பணி நிலவரம் குறித்த தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் கூறுகையில், இதுவரை 20 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்  இதில் 15 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. 5 பேரின் அடையாளம் தெரியவில்லை. இறந்த 15 பேரில் ஆறு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 5 பேர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள், 4 பேர் ஒடிஷாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர் என்று கூறியிருந்தார்..



இன்று காலை வரை 27 பேர் இறந்திருந்தனர். இந்த நிலையில் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமி என்ற பெண் தொழலாளர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் ஒரு மரணமும் ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 40 மணி நேரமாக இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் பெண் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர்.

தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் படையினர் தொடர்ந்து முழு வீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை உயிருடன் 23 பேரை அவர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு கூறும் கணக்குப்படி பார்த்தால் இன்னும் 33 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, தற்போது இடியாத நிலையில் பக்கத்தில் உள்ள இன்னொரு 11 மாடிக் கட்டடமும் கூட ஆபத்தானதே என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள்  தெரிவித்ததால் மற்றொரு 11 மாடிக் கட்டிடத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது



0 கருத்துகள்:

கருத்துரையிடுக