ஞாயிறு, 27 ஜூலை, 2014

பெருநாள் ஸ்பெஷல் : வட்லாப்பம்

பெருநாள் என்றாலே எல்லார் வீட்டிலும் இனிப்பு நிச்சயம் இருக்கும். அதுவும் வட்லாப்பம் தான் பெரும்பாலான வீடுகளில் ஸ்பெஷல். அதன் எளிமையான வித்தியாசமான செய்முறை

தேவையான பொருட்கள்
முட்டை - 8
காய்ச்சிய பசும் பால் – 1 ½ லிட்டர்
சீனி – 2 ரைஸ் குக்கர் கப்
வன்னிலா எசன்ஸ் – சில சொட்டுக்கள்
முந்திரி 10
ஏலக்காய் 6
நெய் 20 மில்லி

செய்முறை
பாலை காய்ச்சி ஆறவைத்து வன்னிலா எசன்ஸ் சேர்க்கவும். முட்டையையும் சீனியையும் நுரை வரும் அளவுக்கு மிக்ஸ்யில் அடித்து வைக்கவும்.
முந்திரி மற்றும் தோல் நீக்கப்பட்ட ஏலக்காய் (விதை மட்டும்) மிக்சியில் இட்டு ஒரு கல் உப்பிட்டு  மிக சற்று தண்ணீர் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடித்து வைத்த முட்டையையும் சீனியையும் சேர்த்து வடித்து ஆறிய பாலோடு சேர்த்து கலக்கவும். குக்கரில் தண்ணீர் வைத்து அதற்கு மேல் சரியாக பொருந்தக்கூடிய ஒரு பாத்திரத்தில் நெய் தடவி வட்லாப்ப கலவையை ஊற்றி மூடி போட்டு மிதமான தீயில் வைத்து நீராவியில் வேகவிடவும். வெந்ததும் இறக்கி நன்றாக ஆறவிட்டு பின் துண்டுகள் போட்டு பரிமாறவும். விருப்பமிருந்தால் நட்ஸ் திரித்து தூவி அலங்கரிக்கவும். இந்த வட்லாப்பம் வாய்க்கு ருசியாகவும் சாப்பிட மிருதுவாகவும் இருக்கும்.

இந்த வட்லாப்பத்தை தேங்காய்பால் பயன்படுத்திதான் பெரும்பாலும் செய்வார்கள். ஆனால் பசும்பாலில் செய்வதால் திகட்டாமல் சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் சத்துள்ள ஒரு உணவாக அமையும். கேராமல் புட்டிங் போன்ற சுவையுடன் இருக்கும்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக