கடலூர்:கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் நீடித்து வந்த வெயிலின் தாக்கம் சில நாட்களாக பெய்த மழையால் குறைந்தது.
நேற்று இரவில் பரங்கிப்பேட்டை விருத்தாசலம், வடலூர், நெய்வேலி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இடிமின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில்
மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மழையால் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. வடலூரில் நள்ளிரவிலும் மழை நீடித்தது.
பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றும் அதை தொடர்ந்து மிதமான மழையும் பெய்தது.
திட்டக்குடி, ராமநத்தம், பெண்ணாடம், தொழுதூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணிவரை மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழைபெய்தது.
பண்ருட்டியில் இன்று காலையில் விட்டு, விட்டு மழை தூறியது. வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக