சனி, 5 ஜூலை, 2014

இராக்கில் இருந்து 46 நர்சுகள் பத்திரமாக இன்று இந்தியா வந்தடைந்தனர்.



மும்பை :இராக்கில் இருந்து  46 நர்சுகள் பத்திரமாக இன்று காலை இந்தியா வந்தடைந்தனர். ஈராக்கில் போராளிகள் பாதுகாப்பாக 46 இந்திய நர்சுகள் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.அவர்கள் எங்களை நன்றாக கவனித்தார்கள் என்று வாக்குமூலம் நர்சுகள்  அளித்தார்கள் 
இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கும் அரசுப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகின்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 46நர்சுகள் போராளிகளின் பிடியில் இருந்தனர்.
இவர்களை இந்தியா அழைத்து வர  பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் இராக்கின் போராளிகளிடமிருந்து  46 இந்திய நர்சுகளும் போர் பதற்றமற்ற எர்பில் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கு மேலும் 137 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு மொத்தம் 183 இந்தியர்களுடன் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்ட இந்த சிறப்பு விமானம், காலை 9.30 மணியளவில் மும்பை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
மும்பையில் இறங்க வேண்டிய சிலரை இறக்கி விட்ட பின்னர், அங்கு எரிபொருள் நிரப்புதல், பயணிகளுக்கான உணவுகளை சேகரிப்பது போன்றவற்றை முடித்த பிறகு அதே விமானம் சற்று நேரத்தில் மும்பையில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12 மணியளவில் கொச்சி விமான நிலையத்தை சென்றடைகிறது.

அங்கு கேரளாவை சேர்ந்த நர்சுகளை இறக்கி விட்ட பின்னர், சுமார் 100 பயணிகளை இறக்கிவிட அந்த விமானம் ஐதராபாத்துக்கு செல்லும். அதன் பின்னர், மேலும் சிலரை இறக்கி விட டெல்லி செல்கிறது.
போராளிகள் பிடியில் இருந்த 46 இந்திய நர்சுகளில் 39 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 6 பேர் நீலகிரி கூடலூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். மற்றவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள்.
முன்னதாக நர்சுகள் மீட்பு தொடர்பாக கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவை 2 முறை சந்தித்து பேச்சு நடத்தியமையும், மத்திய அமைச்சர் சுஷ்மா இராக்கில் தவிப்பவர்களை மீட்க அரபு நாடுகளின் உதவியை நாடியமையும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சண் செய்திக்கும் பேட்டி கொடுத்த மோனிஷா :-
எங்களின் மீது அவர்களின் விரல் கூட படவில்லை
நாங்கள் பெண்கள் என்பதாலும் இஸ்லாமிய சட்டபடி பெண்களிடம் தவராக நடக்க கூடாது என்ரு சட்டம் இருப்பதால் நாங்கள் அவர்களிடம் தைரியமாக பேசினோம். அவ்ர்களின் விரல் கூட எங்கல் மீது படவில்லை அவர்கள் எங்களை வற்புறுத்துவார்கள் நாங்கள் பணி செய்ய மருப்போம் நாங்கள் பெண்கள் என்பதால் விட்டு விடுவார்கள்.
நாடு திரும்பிய செவிலியர் மோனிசா பேட்டி அவரின் பேட்டியில் ஒரு முறை கூட isis தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை
 
 
சன் நியுஸ் நிருபர் திரும்ப திரும்ப தீவிரவாதிகள் என்ரு குறிப்பிட போதும் கூட மோனிசா isis people என்று மட்டுமே குறிப்பிடார் போராளிகளை தீவிரவாதிகள் என்று ஆக்குவதும் தீவிரவாதிகளை போராளிகளாக மாற்றுவதும் இன்றைய மீடியாக்கள் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது ..

 

2 கருத்துகள்:

  1. அது என்ன - 'சிக்கித் தவித்த' என்ற சொற்றொடர்! நீங்களும் 'அந்த மூன்றாம் தர' மீடியா வரிசையில் சேருகின்றீர்களா???? - போராளிகளின் சிறுவிரல் கூட அந்நர்சுகளின் மீது படவில்லை என்று அந்நர்சுகளே சுட்டிக் காட்டியும் ...'சிக்கித் தவித்த' என்ற சொற்றொடர் தேவை தானா?!
    --- அன்புடன் உங்கள் சகோதரன்:
    பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
    My BLOG: http://portonovocomputertech.blogspot.com/ (தொட்டு விடும் தூரம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டி காட்டியமைக்கு நன்றி
      ...'சிக்கித் தவித்த' என்ற சொல் நீக்கப்பட்டது

      நீக்கு