வெள்ளி, 4 ஜூலை, 2014

விலகும் வி.சி.க, முஸ்லிம் லீக்.. தனித்துவிடப்படும் திமுக?

சென்னை: உட்கட்சி புகைச்சலே ஓய்ந்து போகாத நிலையில் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசிப்பதாக அறிவித்திருப்பது திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருப்பினும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடதுசாரிகளுடன் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.தமிழக அரசியல் களத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை.. நிரந்தர எதிரிகளும் இல்லை என்பது ஒவ்வொரு சட்டசபை, லோக்சபா தேர்தல் களத்திலும் சொல்லப்பட்டு வருகிற கருத்து. அண்மைக்காலமாக அப்படியெல்லாம் நடப்பதும் கூட அதிசயம் என்கிற வகையில்தான் அரசியல் களம் இருக்கிறது.லோக்சபா தேர்தலில் அதிமுகவால் விரட்டியடிக்கப்பட்ட இடதுசாரிகள், திமுகவுடன் சேருவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் இடதுசாரிகள் அந்த பக்கம் தலையைக் கூட வைத்துப் பார்க்காமல் தற்கொலை முடிவென்று தெரிந்தும் தனித்தே போட்டியிட்டனர்.

திமுகவுக்கு நட்பு சக்தியாக தோழமை சக்தியாக கை கொடுத்தவை விடுதலை சிறுத்தைகளும் இந்தியன் யூனிஸ் முஸ்லிம் லீக் கட்சியும்தான்.. ஆனால் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்த இரண்டு கட்சிகளும் கூட இனி எப்போதுமே திமுகவுடன் கூட்டணி அமைக்காதோ என்கிற நிலை உருவாகியுள்ளது
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைப் பொறுத்தவரையில் தொகுதி ஒதுக்கீட்டிலேயே சிக்கல் தொடங்கியது. அவர்கள் விரும்பிய வேலூரை தராமல் இழுத்தடித்தது தி மு க
 
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் மகனுக்காக முஸ்லிம் லீக் இழுத்ததடிக்கப்பட்டது. ஆனால் கருணாநிதி தலையிட்டு வேலூரை முஸ்லிம் லீக் கட்சிக்கு பெற்றுக் கொடுத்தார்.
இருப்பினும் துரைமுருகன் ஆதரவாளர்கள் தங்களது வேலையை தேர்தலின் போது காட்டியதால் முஸ்லிம் லீக் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை முஸ்லிம் லீக் கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை. இனிவரும் காலத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டுமெனில் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்கிற விரக்தியின் விளிம்பில் நிற்கிறது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்.
இதேபோல்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியும்.. தொகுதி ஒதுக்கீட்டின் போதே ஆரம்பித்த பஞ்சாயத்து தேர்தலிலும் எதிரொலிக்க சிறுத்தைகள் மிகக் கடுமையான காயத்துடன் திமுகவினர் மீது அதிருப்தியாக உள்ளனர். தேர்தலில் திமுகவினர் இணைந்து பணியாற்றவே இல்லை என்பது விடுதலை சிறுத்தைகளின் கோபம்.

இதன் எதிரொலியாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வெளிப்படையாகவே சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பற்றி கருத்து கேட்க இருக்கிறோம் என்று திருமாவளவன் அறிவித்துவிட்டார்.
ஏற்கெனவே இடதுசாரிக் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்து வரும் திருமாவளவன், சட்டசபை தேர்தலிலும் அவர்களுடன் இணைந்து போட்டியிடவே சாத்தியம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



 

 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக