வெள்ளி, 23 மே, 2014

பரங்கிப்பேட்டைTNTJ கோடைக்கால பயிற்சி முகாம் :வெற்றி மாணவர்களுக்கு பரிசு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் நடந்த கோடைகால பயிற்சி வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கோடை கால பயிற்சி வகுப்பு 10 நாட்கள் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட பேச்சாளர் பாஜல் ஹூசேன் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாவட்ட துணைத் தலைவர் அப்துல்லா பரிசு வழங்கினார். நகர தலைவர் அமானுதீன், நகர செயலர் ஜாகிர் உசேன், பொருளாளர் பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.








படங்கள்:TNTJPNO

0 கருத்துகள்:

கருத்துரையிடுக