சிதம்பரம்:சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த போது முதலை கடித்து மாணவரின் கால் துண்டானது.
சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஹரீஷ் (வயது 12). இவர் வையூரில் உள்ள பள்ளியில் 7–ம் வகுப்புக்கான தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தான். காட்டுக்கூடலூர் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் சிறுவன் ஹரீஷ் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தான்.
அப்போது திடீரென தண்ணீருக்குள் இருந்த முதலை ஹரீசின் இடது காலை கடித்தது. இதனால் துடிதுடித்து போன ஹரீஷ் அபாய குரல் எழுப்பினான். இதை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி சென்று, ஹரீசை முதலையின் பிடியில் இருந்து மீட்டனர்.
எனினும் சிறுவனின் வலது கால் முட்டிக்கு கீழ்பகுதியை முதலை துண்டாக கடித்து இழுத்து சென்ற விட்டது. இதை அடுத்து, சிறுவனை சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, பின், ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரிக்கு சிறுவன் ஹரீஷ் கொண்டு செல்லப்பட்டான். ஒரே மகனுக்கு நேர்ந்த சோக சம்பவத்தை பார்த்து, அவனது தாய் மருத்துவமனையில் கதறி அழுதது, மருத்துவமனை வளாகமே சோகத்தில் மூழ்கியது. இச்சம்பவம் காட்டுக்கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து இப்பகுதியில் வாய்க்கள் மற்றும் ஆற்றுப்படுகை களில் முதலைகள் நடமாட்டத்தினால்
மக்கள் அச்சத்தில் உள்ளனர் கடந்த மார்ச் மாதம் முதல் 5 க்கும் மேற்பட்ட முதலைகள் இப்பகுதியில் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த முதலைகளை இப்பகுதியில் கொண்டுவந்து விட்டவர்கள் ஒசாமா பின்லேடன் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்களோ!!!!!!
பதிலளிநீக்கு