டெல்லி :நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 ஆவது மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில், மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
16 ஆவது மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில், மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது 34% ஆகும். 14ஆவது மக்களவையில் இந்த எண்ணிக்கை 24% ஆகவும், 15ஆவது மக்களவையில் 30% ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான அமைப்பு, மக்களவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆராய்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவில் மட்டும் 98 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 பேரில் 8 பேர் மீதும், அதிமுக வைச் சேர்ந்த 37 பேரில் 6 பேர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. சதவிகித அடிப்படையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முதலிடத்திலும், சிவசேனா கட்சி 2ஆவது இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளதாக" அந்ததகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக