கடலூர் :கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொறு ஆண்டும் அரசு பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சார்பில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிக்கூடங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அலுவலகத்துக்கு புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த புத்தகங்களை பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் (ஜூன் 2–ந் தேதி) அன்றே அனைத்து பாட புத்தகங்களையும் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையடுத்து நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று கடலூர் வட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், வாகனங்களில் தங்கள் பள்ளிக்குரிய அனைத்து பாட புத்தகங்களையும் வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
இன்று(செவ்வாய்க்கிழமை) குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் வட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும், நாளை (புதன்கிழமை) பண்ருட்டி வட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு, விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் இருந்து பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக