புதன், 21 மே, 2014

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து: பொறியாளர் பலி; 6 பேர் காயம்

நெய்வேலி :நெய்வேலி 1வது அனல்மின் நிலையத்தில் உள்ள 7வது யூனிட்டில் கொதிகலன் வெடித்து சிதறியதில் முதன்மை பொறியாளர் உயிரிழந்தார். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் கட்டிட இடுபாடுகளில் சிக்கிய என்.எல்.சி. முதுநிலை மேலாளர் பொறியாளர் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் அவருடன் பணியில் இருந்த செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிற்சி பொறியாளர் அபிஷேக்கவுதம் தம்போடா மற்றும் ஒப்பந்தக்காரர் சிவலிங்கம், ஒப்பந்த தொழிலாளர்கள் ஜோதி, பலராமன் உட்பட 6  பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பணியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
 காயமடைந்த  6 பேரில் ஆபத்தான நிலையில் உள்ள 2 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து என்.எல்.சி.யில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக