சென்னை:தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் பச்சைமால், பி.வி.ரமணா மற்றும் தாமோதரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
துறைகள் மாற்றம்
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண்துறையும்,
எஸ்.பி.வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையும், கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் மூவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவுள்ளனர். எஸ்.பி.வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையும், கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
துறைகள் மாற்றம்
உள்ளாட்சித் துறையை கவனித்து வந்த கே.பி.முனுசாமிக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் நலத்துறையைக் கவனித்து வந்த அமைச்சர் ஆ.பி. உதயகுமாருக்கு, வருவாய் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, எஸ்.சுந்தர்ராஜுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவது, இது 14-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுக நாடாளமன்ற குழு தலைவராக தம்பிதுரை ,துணைத்தலைவராக - வி.மைத்ரேயன் அறிவிக்கப்படுள்ளனர்..
மேலும் தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, கன்னியாகுமரி, தர்மபுரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி மாவட்ட அதிமுக செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
"தர்மபுரி மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.செல்வராஜ், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜாண் தங்கம் திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.வி.ரமணா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஏ.அன்பழகன், அதிரடியாக நீக்கப்பட்டுள்ளர்.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக