கொழும்பு: இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடக தொடர்பாளர் இசைப்பிரியா மிகவும் கோரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்.
இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர்
ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.
ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.
மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது.
இலங்கை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இசைப்பிரியா கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தற்போது வெளியாகியுள்ள படம் மூலம் அம்பலமாகியுள்ளது.












0 கருத்துகள்:
கருத்துரையிடுக