வியாழன், 22 மே, 2014

கடலூர்-நாகை துறைமுகத்தில் 1-ம் ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்:குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக காரைக்காலில் 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.அதனை தொடர்ந்து கடலூர்,நாகை துறைமுகங்களிலும் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. தூத்துகுடி துறைமுகத்திலும் 1 ம் ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமானில் இருந்து 490கி.மீ தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மையம் உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து மியன்மார் நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக