கொல்கத்தா :பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வந்தால் நாடு சீரழிந்துவிடும் என்று மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தாக்கிப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், “மோடி பிரதமராவது ஒரு கெட்ட கனவைப் போன்றது. அவருக்கு ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றன. நரேந்திர மோடி மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்தால் நாடு சீரழிந்துவிடும்; இருளில் மூழ்கிவிடும். வளர்ச்சி தொடர்பாக அவருடைய ‘அறிவுரை’ எங்களுக்குத் தேவையில்லை. மேற்குவங்க மக்களை பிற மாநில மக்களிடம் இருந்து பிரிக்க மோடி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
குஜராத் மாநிலத்தில் ரத்த ஆறை ஓடவிட்ட மோடி, தற்போது மேற்கு வங்கத்தையும் ரத்தக் கடலாக மாற்ற முற்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக