கடலூர்: மாவட்டத்தில் தேர்தல் முடிந்த பின் மின்தடை நேரம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மின் உற்பத்தியை காட்டிலும் மின்தேவை கூடுதலாக இருப்பதால் மின்தடை
அமல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நேரமாக இருந்ததால் ஆளுங்கட்சிக்கு
கெட்டப்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருதி தேர்தல் பிரசார நேரத்தில் முடிந்த
வரை தடையில்லா மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தேர்தல்
முடிந்துவிட்டதால் முன்பு இருந்தது போலவே மின்தடை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நகரப்பகுதியில் காலையில் 2 மணி நேரமும், கிராமப்புற பகுதியில் 4 மணி நேரமும்
மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக