ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

கடலில் மீன்பிடி தடை எதிரொலி பரங்கிப்பேட்டை பகுதியில் மீன்கள் விலை கிடு, கிடு உயர்வு

பரங்கிப்பேட்டை:கடலில் மீன்பிடிக்க தடை எதிரொலியால் பரங்கிப்பேட்டை பகுதியில் மீன்கள் விலை கிடு, கிடு உயர்ந்துள்ளது.

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தையொட்டி ஆண்டுதோறும் மத்திய அரசு 45 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. அதன்படி, இந்தாண்டும் கடந்த 14–ந்தேதி முதல் 45 நாட்களுக்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அரசு தடைவிதித்தது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடலோரப்பகுதியை சேர்ந்த பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன்பேட்டை, சாமியார்பேட்டை, மடவாப் பள்ளம், குமாரப்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, மாலுமியார்பேட்டை, அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, பேட்டோடை, பெரியகுப்பம், முடசல்ஓடை, எம்.ஜி.ஆர் திட்டு, சூர்யாநகர், சின்னவாய்க்கால் உள்பட 50–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் அந்தந்த கிராம கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கண்ணாதோணி, கட்டுமரங்கள் வைத்து தொழில் செய்யும் ஒரு சில மீனவர்கள் கடலுக்கு சென்று பிடித்துவரும் மீன்களை அருகில் உள்ள மீன்மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர்.
இதனால், ஒரு கிலோ வஞ்சரமீன் ரூ.550க்கம், கானாங்கத்தை ரூ.130, சூரைமீன் ரூ.130, கோலா மீன்ரூ.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மீன்தடை காலங்களில் வளர்ப்பு மீன்களான கட்லா, ரோகு, கோழிகெண்ட், போட்லாக் போன்ற மீன்கள் அதிகமாக மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய படகு மீனவர்கள் மீன்பிடி தடை காரணமாக மீன்பிடிக்க செல்லாததால் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகிய மீன்மார்க்கெட்டுகளுக்கு மீன்வரத்து குறைந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக