ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

சிதம்பரத்தில் மாணவரை கொன்று பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டிவைத்த கொடூரம்:கொலையாளி கைது

சிதம்பரம்:சிதம்பரத்தில் காணாமல் போன பிளஸ்-1 மாணவர், கொடூரமாக கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகில் இருந்த ஓட்டலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது இதுதொடர்பாக குற்றவாளியான ஹோட்டல் உரிமையாளர் ஜவகர்பாபுவை போலீஸார் கைது செய்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
சிதம்பரம் கோவிந்தசாமிதெருவில் ஒரு வீட்டின் மாடியில் வசிப்பவர் கந்தசாமி. அண்ணாமலைப் பல்கலையில் செக்யூரிட்டியாக பணியாற்றும் இவரது மகன் சூரியபிரகாஷ் (16) சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்.21-ம் தேதி திங்கள்கிழமை மாலை சூரியபிரகாஷ் சைக்கிளில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வீட்டு முன்பு சைக்கிளை நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் அம்மாணவரை காணவில்லை. மாணவரை தேடி பார்த்த அவரது பெற்றோர், செல்போனில் சூரியபிரகாஷை தொடர்பு கொண்டனர்.
அப்போது வேறு நபர் செல்போனை எடு்த்து ரூ.25 லட்சம் பணம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவிப்போம் எனக்கூறி துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஏப்.23-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை மாணவர் சூரியபிரகாஷ் வீட்டின் கீழ்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இறந்து கிடந்தார். ரத்த வாடை அடித்ததாலும், ரத்தம் கடையிலிருந்து வெளியேறியதால் சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்கள் கடையை திறந்து பார்த்து போது இச்சம்பவம் தெரியவந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார் மாணவர் சூரியபிரகாஷ் வசிக்கும் கீழ்வீட்டில் குடியிருக்கும், ஹோட்டல் உரிமையாளரான ஜவகர்பாபு (32), அவரது மனைவி ஆரவள்ளி ஆகிய இருவரையும் போலீஸார் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்விரோதம் காரணமாக மாணவர் சூரியபிரகாஷை, கீழ்வீட்டில் வசிக்கும் ஜவகர்பாபு கொலை செய்து, தனது கடைக்குள் சாக்குமூட்டையில் வைத்து பூட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியது. அடுக்குமாடி குடியிருப்பு முன்பு ஏராளமானோர் திரண்டனர். பள்ளிக்கூட மாணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் ஜவகர்பாபுக்கு சொந்தமான ஆட்டோவை தூக்கி வெளியே கொண்டுவந்து தீ வைத்து எரித்தனர்.
மேலும் புகார் கொடுத்தவுடனேயே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சிதம்பரம் நகர போலீஸ்நிலையம் முன்பு சூரியபிரகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். மாணவர் சூரியபிரகாஷ் மாயமான அன்றிரவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவனை கொன்று பிணத்தை மறைத்து வைத்துக்கொண்டே மாணவரின் குடும்பத்தினரிடம் ஜவகர்பாபு ரூ.25 லட்சம் கேட்டு பேரம் பேசி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.


கொலையாளி ஜவகர்பாபு


இந்நிலையில் சனிக்கிழமை கொலையை ஒப்புக்கொண்ட ஜவகர்பாபு தனது வாக்குமூலத்தில், மாணவர் சூரியபிரகாஷிடம் பல முறை கட்டாயப்படுத்தி ஓரின சேர்க்கை செய்ததாகவும், சம்பவத்தன்று தனது மனைவி ஆரவள்ளி திருவிழாவிற்காக சொந்த ஊரான முட்லூருக்கு சென்றதால், டியுஷன் சென்று வந்த மாணவர் சூரியபிரகாஷை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, ஓரின சேர்க்கைக்கு முற்பட்ட போது எதிர்ப்பு தெரிவித்தார்.
அதனால் ஆத்திரமடந்த ஜவகர்பாபு உருட்டு கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்து, சாக்கு மூட்டையில் வைத்து கட்டி தனது ஹோட்டலுக்குள் கொண்டு போட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் ஜவகர் உடலை வெளியே கொண்டு செல்ல முடியாததால், ரத்தம் வெளியேறி போது அப்பகுதி மக்கள் தெரிவித்ததை அடுத்து போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து ஜவகர்பாபுவை சனிக்கிழமை கைது செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக