சனி, 26 ஏப்ரல், 2014

மே 9-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் :அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு!

சென்னை:பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
 
மாநிலம் முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச 25 ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 8.78 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
 
தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி:
 
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
 
தேர்வர்கள் தங்களது பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
 
முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்:
 
 www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in
 
இவற்றில் www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி ஸ்மார்ட் போன் மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள்:
 
மாணவர்கள் எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவுகளை மே 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் அறிந்துகொள்ளலாம்.
 
அதற்காக 09282232585 என்ற எண்ணுக்கு கீழ்க்காணும் வகையில் எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.
 
TNBOARD<space><Register No><DOB in DD/MM/YYYY> என்ற அடிப்படையில் எஸ்.எம்.எஸ். செய்யலாம்.
 
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்:
 
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக