பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை மகாத்மா காந்தி மருத்துவ கல்லுரி - மூனா மருத்துவமனையில் இன்று ஃகத்னா (சுன்னத்) செய்யப்பட்டது.
முன்னதாக இதற்காக முன்பதிவு செய்த சுமார் 90 குழந்தைகளுக்கு உடல் தகுதி பரிசோதனைகள் நடைபெற்றது. மகாத்மா காந்தி மருத்துவ கல்லுரியின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நஸிருதீன் M.S. (Surgeon) அவர்கள் தலைமையில் மயக்க மருந்து நிபுணர் உள்ளிட்ட மருத்துவக் குழு சுமார் 90 முஸ்லிம் பிள்ளைகளுக்கு இரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். அதனை தொடர்ந்து இன்று முதல் கட்டமாக 20 பிள்ளைகளுக்கு
சுன்னத் (ஃகத்னா ) செய்யப்பட்டது.
சுன்னத் (ஃகத்னா ) செய்யப்பட்டது.
சேவை மனப்பான்மையுடன் ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து முஸ்லிம் பிள்ளைகளுக்கும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் சிறப்பு ஃகத்னா (சுன்னத்)ரூ.1500 கட்டணத்தில் செய்ய உள்ளனர்.
மிகவும் ஏழை எளியோர்க்கு டாக்டர் ரஹ்மான்ஸ் அறக்கட்டளை சார்பில் இலவசமாக ஃகத்னா செய்யவுள்ளார்கள்.
நன்றி:MYPNO
0 கருத்துகள்:
கருத்துரையிடுக