வியாழன், 24 ஏப்ரல், 2014

மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம் தமிழகத்தில் விறு விறு வாக்குப்பதிவு

படம் :கோப்பு
சென்னை:தமிழகம், புதுவையில் பலத்த பாதுகாப்புடன் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 35.28% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் 27% வாக்குகள் பதிவாகியுள்ளது. வட சென்னையில் 27.4%, தென் சென்னையில் 26.3% மத்திய சென்னையில் 25.4% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
காலை 11 மணி நிலவரப்படி தருமபுரியில் அதிகபட்சமான 42.9% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
9 மணி நிலவரம்: 14.31% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 14.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கரூரில் 18%, குறைந்தபட்சமாக அரக்கோணத்தில் 8% வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் காலை 9 மணி நிலவரப்படி 16.45 சதவீத வாக்குகளும், காரைக்காலில் 16.43, மாஹேவில் 14.88%, ஏனாமில் 16.22% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
கடலூர்  தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 17.4%  காலை 11 மணி  நிலவரப்படி 38% 
 
சிதம்பரம் (தனி)  தொகுதியில் 9 மணி நிலவரப்படி 17.6% காலை 11 மணி  நிலவரப்படி 37.6%
 
 
 




வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக