சனி, 19 ஏப்ரல், 2014

ஓட்டுப் பதிவுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரம் ! 23ம் தேதி ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப ஏற்பாடு



கடலூர்:கடலூர் மாவட்ட லோக்சபா தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி விருத்தாசலத்தில் துவங்கியது.
கடலூர் கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமையில், பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மனோகரன், உதவி தேர்தல் அலுவலர்கள் உதயகுமார், ஷர்மிளா, அரவிந்த் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பர்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு 2,816 பேலட் யூனிட்டுகளும், 1,408 கன்ட்ரோல் யூனிட்டுகளும்; சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் சட்ட சபை தொகுதிகளுக்கு 730 கன்ட்ரோல் யூனிட், 730 பேலட் யூனிட்டுகளில் பேலட்பேப்பர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கலெக்டர் கிர்லோஷ்குமார் கூறுகையில், "கடலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், சிதம்பரம் லோக்சபா தொகுதியில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் பேப்பர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
பணி முடிந்தபின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டசபை தொகுதி சேமிப்பு கிடங்கில் வைக்கப்படும். 23ம் தேதியன்று ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்' என்றார்

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக