சனி, 19 ஏப்ரல், 2014

துபாயில் இறந்து போன தமிழக இந்து சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய அமைப்பு

துபாய் : துபாயில் இறந்து போன தமிழகத்தைச் சேர்ந்த ஜெயராமனின் உடலுக்கு இஸ்லாமிய அமைப்பான ஈமான் அமைப்பின் முயற்சியில் 16.04.2014 புதன்கிழமை துபாய் ஜெபல் அலி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.துபாயில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இறந்து எவ்வித தகவலும் இன்றி துபாய் மருத்துவமனை பிணவறையில் ஜெயராமன் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் ஈமான் அமைப்பு கடலூர் மாவட்டத்திலுள்ள ஜெயராமன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை துபாயிலேயே இந்து மத சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு நடத்த ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோருக்கு அனுமதிக் கடிதம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து 16.04.2014 புதன்கிழமை காலை துபாய் ஜெபல் மலி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.இறுதிச் சடங்கில் ஈமான் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின், முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மறைந்த ஜெயராமனின் ஊரைச் சேர்ந்த இளவரசன் இந்து மத சம்பிரதாயங்களை நிறைவேற்றினார். அவரிடம் துபாய் காவல் துறையினர் ஜெயராமன் இறந்தபோது வைத்திருந்த பணம், கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக