புதன், 19 பிப்ரவரி, 2014

இடம் மாறும் பரங்கிப்பேட்டை EB அலுவலகம்: ஊரிலேயே தக்கவைத்து கொள்ள முயற்சிகள்

பரங்கிப்பேட்டை: நல்லம்பல பிள்ளை தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் பரங்கிப்பேட்டை மின்சார வாரிய அலுவலகம், அக்கட்டித்தின் ஒப்பந்த காலம் முடிவுறும் தருவாயில் உள்ளதால், வேறு புதிய கட்டிடத்திற்கு இடம் மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக மாற்றுக் கட்டிடத்தை வாடகைக்கு பெற்றுத் தர மின்சார வாரியம் தனது நுகர்வோர் மற்றும் பொதுமக்களை முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் கூறியதாவது: - பரங்கிபேட்டை மின்சாரிய வாரியத்தின் துணை அலுவலகம் இடமாற்றம் சம்மந்தமாக கடந்த இரண்டு நாட்களாக நேரிலும், தொலைபேசியிலும் உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்டு வருகின்றனர்.  இது விஷயமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்சாரிய வாரிய அலுவலகம் நமதூரை விட்டு சென்று விடாமல் இருப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறேன். சில நிர்வாக மரபுகளை அனுசரித்து இடம் போன்ற விஷயங்களை தற்போது தெரியபடுத்த இயலவில்லை. இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் அதற்க்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால், இன்ஷா அல்லாஹ், எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரிய துணை அலுவலகம் நமதூரை விட்டு வெளியில் எங்கும் செல்லாது; செல்ல விடமாட்டோம்  என்பதை சகோதரர்கள் அனைவருக்கும் உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

 மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் மாவட்ட ஆட்சியிரிடம் இது குறித்து கோரிக்கை மனுவை  அளிக்க உள்ளது.. அதில் பரங்கிப்பேட்டையில் இயங்கிவரும் மின்வாரிய அலுவலகத்தை பு.முட்லூருக்கு செல்வதை தடுத்து நிறுத்தி பயனற்ற நிலையில்  வண்டிக்காரத் தெருவில் இருக்கும் அரசு கட்டிடத்திற்கு மாற்ற ஆவண செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்று மின்வார வாரிய அலுவலகத்திற்கு சொந்த இடம் இல்லாத காரணத்தினால் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. முன்பு கச்சோரி தெருவில் இயங்கியபோது இதே போன்ற ஒரு பிரச்சினையால் இடம் மாற்றப்பட்டது. அப்போதுகூட புதிய இடம் கிடைக்க கால தாமதம் ஆன போது பி.முட்லூரில் உள்ள சொந்த அலுவலகத்திற்கு மாற திட்டமிட்டது. ஆனால் அபப்போது பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு நிலவியதால் நல்லம்பர பிள்ளை தெருவில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக