பரங்கிபேட்டை:பரங்கிபேட்டை கும்மத்து பள்ளித் தெருவில் டாக்டர் ரஹ்மான்ஸ் அறக்கட்டளை சொந்தமான கட்டிடத்தில் இன்று MGMCRI & மூனா 24/7 மருத்துவமனை திறப்புவிழா நடைப்பெற்றது இன்று திறக்ப்படுள்ள இந்த மருத்துவமனையானது 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த மருத்துவமனை பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரியும், பரங்கிபேட்டை டாக்டர் ரஹ்மான்ஸ் அறக்கட்டளையும் இனைந்து அமைத்துள்ளதுஇன்று நடைப்பெற்ற திறப்புவிழாவில் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர் பின்னர் இலவச சிகிச்சை முகாம் நடைபெற்றது . இம்மருத்துவமனைக்காக தனது வீட்டினை இலவசமாக பெரும் செலவில் ஒரு மருத்துவமனைக்கு ஏற்றார் போல் வீட்டினை மாற்றி தந்துள்ளார் டாக்டர் அப்துல் ரஹ்மான். மேலும் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையின் கிளையாக இது 24 மணி நேரமும் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் டாக்டர், நர்ஸ், மற்றும் லேப் டெக்னிஷியன்களுடன் இயங்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. பரங்கிபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சார்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் மாதமிருமுறை மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், சர்க்கரை நோய் நிபுணர், இருதய நோய் நிபுணர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர், சிறுநீரக நோய் நிபுணர் போன்ற அனைத்துவகை சிறப்பு மருத்துவர்களும் வருகை தர உள்ளனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக