செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பரங்கிப்பேட்டையில் மீன் உணவுப்பொருள்கள் தயாரிக்க பயிற்சி

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் பெண்களுக்கு மதிப்புக்கூட்டிய மீன் உணவுப் பொருள்கள் தயாரிப்பது குறித்த 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய மீன் வளர்ச்சி வாரியம் இணைந்து நடத்திய இப்பயிற்சியில் 40 பெண்கள் பங்கேற்றனர். மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், நண்டு சூப் உள்ளிட்ட மீன் உணவுப்பொருள்கள் தயாரிப்பது குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.  கடல் உணவின் முக்கியத்துவம், மீன்களில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் நிறைவு நாளான திங்கள்கிழமை பரங்கிப்பேட்டை பேரூராட்சிமன்றத் தலைவர் முகமது யூனூஸ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மைய மேலாண்மைக் குழு தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பயிற்சி கையேட்டினை வழங்கினர்.
திட்ட அலுவலர் இளங்கோவன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரையாற்றினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியர் கோபிநாத் உற்பத்தி செய்த மீன் உணவுப் பொருள்களை எவ்வாறு லாபத்துடன் விற்பனை செய்வது, விலை நிர்ணயம் செய்வது குறித்தும் விளக்கமளித்தார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிறுவன இணை அலுவலர் முருகேசன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக