பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் இரண்டாம் கட்டமாக தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நாளை (வெள்ளி) மற்றும் நாளை மறுதினம் (சனி) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற தவறிய மற்றும் விடுபட்ட குடும்பங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் அவர்கள் புகைப்படம் எடுக்க மாவட்ட நிர்வாகத்தால் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டது.
இது குறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ் முஹம்மது யூனுஸ் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது : "தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற தவறிய மற்றும் விடுபட்ட குடும்பங்களுக்கு பரங்கிப்பேட்டையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் காப்பீட்டு அட்டை
வழங்குவதற்கான புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதன்படி, 1வது வார்டு முதல் 11 வார்டைச் சார்ந்த பொதுமக்கள் அரசு பெண்கள் பள்ளியிலும் 12 வது வார்டு முதல் 18 வது வார்டைச் சார்ந்த பொது மக்கள் அகரம் நேஷனல் பள்ளியிலும் பங்கேற்று அடையாள அட்டை பெறுவதற்கான விபரங்கள் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை தவறாது பயன்பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நன்றி:mypno
இந்த திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற தவறிய மற்றும் விடுபட்ட குடும்பங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் அவர்கள் புகைப்படம் எடுக்க மாவட்ட நிர்வாகத்தால் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டது.
இது குறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ் முஹம்மது யூனுஸ் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது : "தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற தவறிய மற்றும் விடுபட்ட குடும்பங்களுக்கு பரங்கிப்பேட்டையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் காப்பீட்டு அட்டை வழங்குவதற்கான புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதன்படி, 1வது வார்டு முதல் 11 வார்டைச் சார்ந்த பொதுமக்கள் அரசு பெண்கள் பள்ளியிலும் 12 வது வார்டு முதல் 18 வது வார்டைச் சார்ந்த பொது மக்கள் அகரம் நேஷனல் பள்ளியிலும் பங்கேற்று அடையாள அட்டை பெறுவதற்கான விபரங்கள் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை தவறாது பயன்பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நன்றி:mypno









0 கருத்துகள்:
கருத்துரையிடுக