திங்கள், 3 பிப்ரவரி, 2014

பரங்கிப்பேட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்திப் பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை: தமிழக அரசின் சுற்று சூழல் துறை மற்றும் தேனி "லா" தொண்டு நிறுவனம் இணைந்து பரங்கிப்பேட்டை மக்களிடையை பிளாஸ்டிக் குறைப்பு, பாலிதீன் ஒழிப்பு ஊர்திப் பிரசார நிகழ்ச்சிகளை நடத்தியது.
பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் நடந்த பிரசாரத்திற்கு காவல்துறை துணை ஆய்வாளர் பாண்டிச் செல்வம் தலைமை வகித்து கொடி அசைத்து துவக்கி வைத்தார். தமிழகமெங்கும் ஒரு பொது இடம், ஒரு பள்ளி என்ற வீதத்திலும், முக்கிய நகரங்களிலும் இந்த பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் மத்தியிலும், பள்ளிகளிலும் பிளாஸ்டிக், பாலிதீன் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள், நிலம், நீர், காற்று மாசுபடுதல் குறித்து விளக்கப்பட்டது. நாட்டுப் புறப்பாடல்கள் பாடி பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
 நன்றி:mypno

0 கருத்துகள்:

கருத்துரையிடுக