ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

காஸ் ஏஜன்சிகள் வரும் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

சென்னை :  எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால்,
வரும் 25ஆம் தியதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சமையல் எரிவாயு விநியோகிக்கும் முகவர்கள் அறிவித்துள்ளனர்.இதனால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது
முகவர்கள் சரியான நேரத்தில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதில்லை என்ற  குற்றச்சாட்டைத் தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் 15 உத்தரவுகள் அடங்கிய புதிதாக வழிகாட்டி நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியது.  இவ்வழிகாட்டுதலில், எரிவாயு சிலிண்டர்களுக்கு விண்ணப்பித்த இரு நாட்களுக்குள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது. இது வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இவ்வழிகாட்டுதல்களை சரிவர கடைபிடிக்காவிட்டால், முகவர்களுக்கு கிடைக்கும் வருவாயில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்தன. இதற்கு சமையல் எரிவாயு முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கூறினர். இதனைத் தொடர்ந்து டெல்லியில், எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு முகவர்கள் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  இப்பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி 25ஆம் தியதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என சமையல் எரிவாயு முகவர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக