கடலூர், : ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் தலைநகராக விளங்கி சிறப்பு பெற்றது கடலூர் நகரம். பழமை வாய்ந்த இந்நகரில் அதற்கேற்றவாறு கட்டிடங்களும் பழமையோடு அமைந்துள்ளது. இதில் ஒரு பகுதியாக ஆட்சியர் அலுவலகமும் இயங்கி வருகிறது. 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிகப்பு மாளிகையில் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்படும் என கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதும் அறிவித்தது. இதையடுத்து புதிய ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலக வளாகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 27.27 ஏக்கர் பரப்பளவில் ஆட்சியர் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. தரைத்தளம் மற்றும் 2 மாடிகள் கொண்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலகங்கள் இடம் பெறவுள்ளது. 18 மாத காலத்தில் பணிகள் முடிக்க ஒப்பந்தத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மாதிரி வடிவமைப்பில் கடலூர் ஆட்சி யர் அலுவலகம் அமைக்கப்படுகிறது. மேலும் ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் மின் இணைப்பிற்காக துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற் கான பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் செம்மண்டலம் பகுதியின் நில மதிப்பு திடீரென உயர்வு கண்டுள்ளது. இந்நிலையில் புதிய ஆட்சியரின் கட்டுமான பணி எவ்வித விழாவுமின்றி துவங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்
படுத்தியுள்ளது.
மாவட்டத் தின் முதன்மை திட்டம் என்ற நிலையில் அடிக்கல் நாட்டு விழா கூட இல்லாமல் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்பது முந்தைய முதற்கட்ட பணியே என சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே முறைப்படி முதல் வர் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது








0 கருத்துகள்:
கருத்துரையிடுக