பரங்கிப்பேட்டை/சென்னை:முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறை நிரப்பு போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று நடைப்பெற்றது. பரங்கிப்பேட்டை கிளை சார்பில் இன்று அதிகாலை 5 மணியளவில் மீராப்பள்ளியிலிருந்து சுமார் 500 பேர் 5 பேருந்துகள் மற்றும் கார்-வேன்களில் சென்னை புறப்பட்சென்னையில் நடைப்பெற்ற போராட்டத்தில் கடலூர், புதுச்சேநரி, விழுப்புரம், காஞ்சிரபும், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து த.த.ஜ.வினர் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். இதே போன்று திருச்சி, நெல்லை, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் மாநகராட்சிகளிலிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைப்பெற்றது. டு சென்றனர்.
சென்னை போரட்டத்தின் போது, இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் பி. ஜைனுல்லாபுதீன் கூறும்போது, "இந்தியாவில் மொத்தம் 20% முஸ்லீம்கள் உள்ளார்கள். அவர்களில் 2% அல்லது 3% முஸ்லீம்கள் மட்டுமே உயர்கல்வியை பெறமுடிகிறது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கையில் பெரும்பாலான முஸ்லீம்கள் பொருளாதாரத்திலும், கல்வியறிவிலும் பின் தங்கியிருப்பதாகவும், அவர்களுக்கு 10% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதை கண்டுகொள்வேயில்லைஎனவே சமூக நிதியை கருத்தில் கொண்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் 10% இட ஒதுக்கீடும், மாநிலத்தில் 7 % இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி சென்னையில் இன்று சிறை நிரப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.
படங்கள்: பரங்கிப்பேட்டை TNTJ.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக