வெள்ளி, 10 ஜனவரி, 2014

தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி!

சென்னை:வரும் பாராளுமன்ற தேர்தலில்  திமுக தலைமையிலான  கூட்டணியில் சேர மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.சென்னையில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம் பெறும் என அக்கட்சி தலைவர்களில் ஒருவரான  பேர .ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அ.தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கூட்டணியில்  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை  சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக