வெள்ளி, 10 ஜனவரி, 2014

காவல் நிலையத்தில் சுடப்பட்ட சிறுவன் அன்சாரிக்கு தொடர் சிகிச்சை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் சிறுவன் தமீம் அன்சாரி சுடப்பட்ட வழக்கில், காயமடைந்த சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக்காக நீலாங்கரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 14 வயது சிறுவன் தமீம் அன்சாரி தொண்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படு காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் காயமடைந்த சிறுவனுக்கு தமிழக அரசு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிறுவனின் தாயார் தொடர்ந்த மனு மீதான விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. சிறுவன் சுடப்பட்ட புகாரில் மாவட்ட நீதிபதி விசாரணை கோரி சிறுவனின் தாயார் மனு தாக்கல் செய்திருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக