தோஹா:கத்தாரில் 2022 அம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து
போட்டிகள் கடும் வெப்பம் காரணமாக கோடை காலத்தில் நடைபெறாது என்று சர்வதேச கால்பந்து
சம்மேளனமான (FIFA)ஃபிஃபாபின் தலைமைச் செயலர் கூறியுள்ளது அவரது சொந்தக் கருத்து என அந்த
அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக பிரெஞ்சு வானொலி ஒன்றிடம் அந்தப் போட்டி நவம்பர் மாதம் மத்தியில் ஆரம்பித்து ஜனவரி மாதம் மத்தியப் பகுதி வரை செல்லும் என்றும், அந்தக் காலப் பகுதி கால்பந்து விளையாடுவதற்கு மிகவும் சிறந்த வானிலை உள்ள காலம் என்றும் ஃபிஃபாவின் தலைமைச் செயலர் ஜெரோம் வால்க் தெரிவித்திருந்தார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பாரம்பரியமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலேயே
நடைபெறும்.
எனினும் கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளை மாற்றுவது குறித்த ஒரு அதிகாரபூர்வ முடிவு, இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்னர் எடுக்கப்படாது என ஃபிஃபா அறிவித்துள்ளது.
இதுவரை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அனைத்துமே மே, ஜூன் அல்லது ஜூலை மாதங்களிலேயே நடைபெற்றுள்ளன.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக